நாசீசிச அரசாங்கம் காந்தி போன்ற தலைவர்களை கேவலப்படுத்த எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் காங்கிரஸ் எதிர்க்கும்.. சோனியா

 
சோனியா காந்தி

நாசீசிச (பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு) அரசாங்கம் வரலாற்று உண்மைகளை பொய்யாக்குவதற்கும் காந்தி-நேரு-ஆசாத் படேல் போன்ற தலைவர்களை கேவலப்படுத்த எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும்  காங்கிரஸ் எதிர்க்கும் என்று சோனியா காந்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று வெளியிட்ட அறிக்கையில் நாட்டுக்கு வாழ்த்து செய்தியோடு, மத்திய அரசையும் கடுமையாக தாக்கி இருந்தார். அந்த அறிக்கையில் சோனியா காந்தி கூறியிருப்பதாவது: கடந்த 75 ஆண்டுகளில், மிகவும் திறமையான இந்தியர்கள் அறிவியல், கல்வி, சுகாதாரம் மற்றும் தகவல் ஆகிய துறைகளில் நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்றுள்ளனர். 

மகாத்மா காந்தியவே ஒரு கோவிலுக்குள்ள விட முடியாதுன்னு சொல்லியிருக்காய்ங்க..! எந்தக் கோவில் தெரியுமா?

இந்தியாவின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்கள் சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான தேர்தல் முறைக்கு அடித்தளமிட்டனர். அவர்கள் வலுவான ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு நிறுவனங்களுக்கான ஏற்பாடுகளையும் செய்தனர். இந்தியா தனது பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மொழிகள் மூலம் ஒரு புகழ்பெற்ற தேசமாக தனது பிம்பத்தை உறுதிப்படுத்தியுள்ளது. 

பா.ஜ.க.

மத்திய பா.ஜ.க. அரசு தனது அரசியல் பிரச்சாரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக மகாத்மா காந்தி, ஜவஹாலால் நேரு போன்ற தலைவர்களை கேவலப்படுத்த முயற்சிக்கிறது. சுதந்திர போராட்டத்தின்போது இந்திய படைகள் செய்த தியாகங்களை மத்திய அரசு சிறுமைப்படுத்த முயற்சி செய்கிறது. இந்த நாசீசிச அரசாங்கம் வரலாற்று உண்மைகளை பொய்யாக்குவதற்கும் காந்தி-நேரு-ஆசாத் படேல் போன்ற தலைவர்களை கேவலப்படுத்த எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும்  இந்திய தேசிய காங்கிரஸ் எதிர்க்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.