காங்கிரஸ் அமைப்புகளுக்கு சுயவிமர்சனம் நிச்சயமாக தேவை... சோனியா காந்தி வலியுறுத்தல்

 
காங்கிரஸ்

காங்கிரஸ் மன்றங்களுக்கு (அமைப்புகள்) சுயவிமர்சனம் தேவை என அந்த கட்சியின் தலைவி சோனியா காந்தி வலியுறுத்தினார். 

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை காங்கிரஸ் கட்சியின் சிந்தனை முகாம் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில் கூறியதாவது:

சோனியா காந்தி

உதய்பூரில் நடைபெற உள்ள சிந்தனை முகாம் ஒரு சடங்காக மாறக் கூடாது. நாம் எதிர்க்கொள்ளும் பல கருத்தியல், தேர்தல் மற்றும் நிர்வாக சவால்களை எதிர்கொள்ளும்  வகையில் மறுசீரமைக்கப்பட்ட அமைப்பை கூற வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். காங்கிரஸ் மன்றங்களில் சுயவிமர்சனம் நிச்சயமாக தேவை. இருப்பினும் தன்னம்பிக்கை மற்றும் மனஉறுதிய சிதைத்து, இருள் மற்றும் அழிவு நிறைந்த சூழல் எங்கும் பரவும் வகையில் அதை செய்யக்கூடாது.

காங்கிரஸ்

அரசியல், பொருளாதாரம், சமூக நீதி, விவசாயிகள், இளைஞர்கள் மற்றுமு அமைப்பு சார்ந்த பிரச்சினைகள் குறித்து 6 குழுக்களாக விவாதம் நடைபெறும். நமது கட்சியின் விரைவான மறுமலர்ச்சிக்கான ஒற்றுமை, ஒருங்கிணைப்பு, உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு என்று ஒற்றை மிகையான செய்தி உதய்பூரில் சத்தமாகவும், தெளிவாகவும் வெளிவருவதை  உறுதி செய்வதில் கட்சி உறுப்பினர்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.