2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக 3 குழுக்களை அமைத்த சோனியா காந்தி.. ஜி 23 தலைவர்களுக்கு குழுவில் இடம்

 
சோனியா காந்தி

2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசியல் விவகார குழு, பணி குழு என 3 குழுக்களை சோனியா காந்தி அமைத்துள்ளார்.


2024ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை குறித்து காங்கிரஸ் கட்சி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி விட்டது. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவி சோனியா காந்தி நேற்று, 8 பேர் கொண்ட அரசியல் விவகார குழு, பணி குழு மற்றும் பாரத இணைப்பு பயணத்துக்கான மத்திய திட்ட குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். காங்கிரஸ் அமைப்பில் சீர்த்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய ஜி 23 தலைவர்களில் சிலருக்கு இந்த குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

குலாம் நபி ஆசாத்

காங்கிரஸின் அரசியல் விவகாரங்கள் குழுவில், ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே, அம்பிகா சோனி, திக்விஜய சிங், வி.சி. வேணுகோபால், ஜிதேந்திர சிங் மற்றும் ஜி-23 தலைவர்களில் குலாம் நபி ஆசாத் மற்றும் ஆனந்த் சர்மாக ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 8 பேர் கொண்ட பணி குழுவில், ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக்,ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், அஜய் மாக்கன், பிரியங்கா காந்தி, ரன்தீப் சுர்ஜேவாலா மற்றம் சுனில் கன்கோலு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

2014ம் ஆண்டு முதல் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு எதிரானது.. திக்விஜய சிங்

பாரத் இணைப்பு யாத்திரை ஒருங்கிணைப்புக்கான மத்திய திட்டமிடல் குழுவில், திக்விஜய சிங், சச்சின் பைலட், சசி தரூர், ரவ்னீத் சிங் பிட்டு, கே.ஜே.ஜார்ஜ், ஜோதிமணி, பிரத்யுத் போர்டோலோய், ஜிது பட்வாரி மற்றும் சலீம் அகமது உள்பட ஒன்பது உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். சோனியா காந்தியின் இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சியினருக்கு புது தெம்பை அளித்துள்ளது.