சிலர் உதயநிதிக்கு முட்டுக் கொடுப்பதாக நினைத்துக்கொண்டு.. டாக்டர் ஷாலினி ஆவேசம்
கலைஞர் அளவுக்கு இல்லை என்றாலும் அவரும் கட்சிக்காக ரொம்பவே கஷ்டப்பட்டார் என்று சொல்லி ஸ்டாலினை கொண்டு வந்தார்கள். இப்போ ஸ்டாலின் அளவுக்கு இல்லை என்றாலும் ஒன்றரை ஆண்டுகளாக கட்சிகாக உழைத்தார், கலைஞரின் பேரன் என்று சொல்லி உதயநிதியை கொண்டு வருகிறார்கள். அப்புறம் நல்ல தலைவர்கள் எப்படி கிடைப்பார்கள். உதயநிதி இப்போது கற்றுக்கொண்டு வருகிறார். அதை அவரே ஒப்புக்கொள்கிறார். அப்புறம் ஏன் குருவி தலையில் பனங்காயை வைக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பி இருந்தார் மனநல மருத்துவர் ஷாலினி.
அவர் மேலும், உதயநிதியை அமைச்சராக்கியோது அல்லாமல், முத்த அமைச்சர்கள் பலர் இருக்க அவரை முன்னிலைப்படுத்துவதை கடுமையாக விமர்சித்துள்ளார் ஷாலினி. கோவிலில் சாமியை தரிசனம் செய்ய கியூவில் இரண்டு நாட்களாக காத்திருப்பார்கள். திடீரென்று விஜபி நேரடியாக சென்று தரிசனம் செய்துவிட்டு போவார். இரண்டு நாட்களாக காத்திருக்கும் மக்கள் எப்படி கடுப்பாவார்கள். ஸ்ட்ராங் லீடராக இருந்தால் நல்லது. இப்போதுதான் திராவிடம் என்பது குறித்து சின்ன சின்ன புத்தகங்கள் படிக்கிறேன் என்கிறார். அவரால் மக்களை சந்தித்து பேசக்கூடிய ஸ்ட்ராங்க் இல்லை. இப்படி ஒரு லீடர் ஏன். நல்ல லீடரைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் . ஒரு டயலாக் கூட சொந்தமாக பேசுவதில்லை. பேசிய ஒரு டயலாக்கையே எல்லா இடத்திலும் திரும்ப திரும்ப பேசுகிறார். அவர் பெரிய ஹீரோன்னு நினைக்கிறாங்க. எங்களுக்கு சேவை செய்வதற்குத்தான் அமைச்சர். அவருக்கு சாமரசம் வீசுவதற்கு நாங்கள் ஆள் அல்ல. திராவிடம் என்கிற பெரிய வெயிட்டை அந்த தோள் தாங்குமா? என்று தெரிவித்திருந்தார்.
இதனால் ஷாலினியை நல்ல மனநல மருத்துவரை போய் பாருங்கள் என்று திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.
இதற்கு ஷாலினி, சிலர் உதயநிதிக்கு முட்டுக் கொடுப்பதாக நினைத்துக்கொண்டு; என்னை, எங்கள் மனநலத்துறையை, எங்கள் கிளையண்ட்டுகளை என்று எல்லாம், "அசிங்கப்படுத்த" முயல்கிறார்கள்.
என்னை அவர்கள் எதுவுமே செய்ய முடியாது. அப்பா பெயர், தாத்தா பெயருக்கு பின்னால் ஒளிந்துக் கொள்ளும் டம்மி பீஸ் இல்லை நான். Self made. Woman.
என் துறையை அவர்கள் ஒன்றும் செய்ய முடியாது. எல்லா கட்சிக்கார குடும்பமும் யாரோ ஒரு சைக்கியாட்ரிஸ்ட்டிடம் சிகிச்சை பெற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள். We keep our confidentiality. You keep your boundaries.
எங்கள் கிளையண்ட்ஸ் எல்லோருமே அறிவாளிகள். நமக்கு ஒரு பிரச்சினை இருக்கு. அதற்கு தீர்வுனு ஒண்ணு இருக்கும். போய் ஒரு expertடை அணுகுவோம் என்று தெரிந்து, தன்முனைப்போடு வருகிறார்கள். அடிமை கூட்டம் மாதிரி, 200 ரூபாய்க்காக விரலடித்துக்கொண்டு வெட்டியாக இல்லை .
மனநல மேம்பாட்டிற்காக வரும் நபர்களை, கேலி செய்வது அறியாமையின் உச்சக்கட்டம். Obviously! அறிவு இருந்தால் தான் "முட்டு கொடுக்கும் மூடர்" டீமில் சேரவே மாட்டார்களே! So dear e Udhayanidhists, உங்கள் அறியாமை இருளை போக்கி, உங்கள் அறிவை அபிவிருத்தி செய்துத்தர, தமிழ்நாடு முழுக்க திறமையான மனநல மருத்துவர்கள் இருக்கிறார்கள். அரசு மருத்துவமனையில் முற்றிலும் இலவசம்.
மனநலம் தான் மகத்தான நலம். இன்றே இயல்வன செய்வீர். மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும் என்று பதிலடி கொடுத்திருக்கிறார் .