குடியரசு தலைவரை இழிவுப்படுத்தியதற்காக நாடாளுமன்றத்திலும், தெருக்களிலும் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்... பா.ஜ.க.

 
திரௌபதி முர்மு

குடியரசு தலைவரை இழிவுப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்திலும், இந்திய தெருக்களிலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. ஸ்மிருதி இராணி வலியுறுத்தியுள்ளார். 

மக்களவை காங்கிரஸ் எம்.பி. ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை ராஷ்டிரபத்னி என்று அழைப்பது போன்ற ஒரு வீடியோ ஒன்று வெளியானது. இதனையடுத்து, இது தனிப்பட்ட பெண்ணின் பாலினத்தை மின பெரிய அளவில் விமர்சிக்கும் வார்த்தை என கூறி, நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியரசு தலைவரை அவமரியாதை செய்ததாக ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க.வினர் வலியுறுத்தினர். ஆனால் தவறுதலாக சொல்லி விட்டேன் மன்னிப்பு கேட்க முடியாது என்று ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி முதலில் தெரிவித்தார். இந்நிலையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: இந்திய குடியரசு தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு பெயர் அறிவிக்கப்பட்டது முதல் அவர் காங்கிரஸ் கட்சியால் தீங்கிழைக்கும் வகையில் குறிவைக்கப்படுகிறார். வேட்பாளராக அவர் போட்டியிட்டபோது அவரை ஒரு பொம்மை என்றும் தீமைகளின் சின்னம் என்றும் காங்கிரஸார் அழைத்தனர். 

மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரம் நடத்தப்பட வேண்டும்.. ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

மேலும் அவர் இப்போது நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் அவருக்கு எதிரான தாக்ககுதல்கள் நிற்கவில்லை. நம் நாட்டில் வரலாறு படைத்த ஏழைக் குடும்பத்தை சேர்ந்த ஒரு பழங்குடி பெண் காங்கிரஸ் கட்சியால் தொடர்ந்து இழிவுப்படுத்தப்படுகிறார். இந்திய குடியரசு தலைவரை இப்படி பேசுவது அவரது அரசியலமைப்பு பதவியை மட்டுமின்றி, நம் நாட்டில் அவர் பிரதிநிதிப்படுத்தும் உயர்ந்த பழங்குடி மரபையும் இழிவுப்படுத்துகிறது என்பது அவருக்கு (ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி) தெரியும். குடியரசு தலைவரை இப்படி இழிவுப்படுத்துவது என்பது நம் நாட்டில் உள்ள பெண்களின் திறனையும், ஆயுதப்படைகளின் உச்ச தளபதியையும், கடின உழைப்பால் அந்தஸ்தில் உயரும் ஏழைகளின் திறனையும் இழிவுப்படுத்துவதாகும் என்பது காங்கிரஸ்காரருக்கு தெரியும். 

ட்விட்டர் ராணியாக மாறிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி

குடியரசு தலைவர் குறித்து ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி கூறிய கருத்துக்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். சோனியா காந்தியின் தலைமையின் கீழ், அரசியலமைப்பு பதவிகளில் உள்ள பெண்களை காங்கிரஸார் தொடர்ந்து இழிவுப்படுத்துகிறார்கள். நமது நாட்டின் முதல் பழங்குடி குடியரசு தலைவரை இழிவுப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்திலும், இந்திய தெருக்களிலும் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த மன்னிப்பு இந்திய குடியரசு தலைவருக்கு மட்டுமல்ல, திரௌபதுி முர்முவால் முறையாக பிரதிநிதித்துவப்படுத்தப்படும் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரியதாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.