செருப்பு பிஞ்சிரும் அண்ணாமல...திமுக கடும் ஆத்திரம்

 
d

நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தால் கடும் ஆத்திரமடைந்த திமுக, செருப்பு பிஞ்சிரும் அண்ணாமல என்று கடுமையாக எச்சரித்திருக்கிறது.  திமுக ஐடி விங் அணியினர்,  #செருப்புபிஞ்சிரும்அண்ணாமல என்ற ஹேஷ்டேக்கினை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் லட்சுமணன் உட்பட 4 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.  லட்சுமணன் உடல் தனி விமானம் மூலம் ஹைதராபாத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் மதுரைக்கு கொண்டுவரப்பட்டது.  மதுரையில் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு தமிழக நிதி அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தி விட்டு புறப்பட்டபோது அவரின் கார் மீது செருப்பு வீசப்பட்டது.  மதுரை விமான நிலைய  நுழைவுவாயில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

 ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பின்னரே பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று சொன்னதால் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.   இந்த ஆத்திரத்தில் தான் நிதி அமைச்சர் பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது செருப்பு வீசப்பட்டு இருக்கிறது.   இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை கைது செய்துள்ளனர் போலீசார்.   கைதானவர்களில் மூன்று பேர் திருச்சியை சேர்ந்தவர்கள் என்பதும்,  இரண்டு பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்திருக்கிறது. 


 நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீசப்பட்ட  சம்பவத்தினால் திமுக கடும் ஆத்திரம் அடைந்து இருக்கிறது.  இதனால் திமுகவில் ஐடி விங் அணியினர்,  #செருப்புபிஞ்சிரும்அண்ணாமல   என்ற ஹேஷ்டேக்கை அதிகம் பரப்பி வருகின்றனர்.

தொண்டன் மீது கை வைத்த ஜெயகுமாருக்கு என்ன நடந்ததோ, அதே தான் மதுரையில் அமைச்சரின் கார்மீது செருப்பு வீசி வன்முறையில் ஈடுபட்டிருக்கும் சங்கி பதர்களுக்கும் நடக்கும் என்று எச்சரித்து வருகின்றனர்.

மற்ற மாநிலங்களில் கொல்லப்புறம் வழியா ஆட்சியை பிடித்ததுபோல், தமிழ்நாட்டில் செய்யமுடியவில்லை என்ற காழ்ப்புணர்ச்சியில், தமிழக அமைச்சர்களை அவமதித்துள்ளனர் பாஜக சங்கிகள். தமிழ்நாட்டில் வன்முறையையும் வெறுப்பு அரசியலையும் செய்யும் பாஜக சங்கி ஒன்றிய நிதியமைச்சரைவிட தமிழ்நாட்டின் நிதியமைச்சருக்கு பொருளாதார அறிவும், நிர்வாகத்திறமையும் அதிகமாக இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத சமூக விரோத பாஜக சங்கிககளின், அமைச்சரின் கார் மீது செருப்பை வீசியுள்ளனர். அராஜக பாஜகவை தமிழ்நாட்டை விட்டு ஒழிக்க வேண்டும் என்று ஆவேசம் கொண்டிருக்கிறார்கள்.


இந்திய திருநாட்டிற்காக உயிர் நீத்த ராணுவ வீரர்  லட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பும் வழியில் நிதியமைச்சர் நிதி மற்றும் மனித வளம்  மேலாண்மை துறை அமைச்சர் பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தை வழி மறித்து தாக்க முற்பட்ட பாஜக குண்டர்களின் அநாகரிகமான செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.  இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறுமானால் திராவிட முன்னேற்ற கழகம் தடுக்கக்கூடிய வகையில் நடவடிக்கையில் ஈடுபடும் என்று தெரிவித்துக் கொள்கிறோம் என்று எச்சரித்திருக்கிறார் சட்டமன்ற உறுப்பினரும்,  மதுரை மாநகர் தெற்கு மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளருமான தளபதி.