தேர்தல் வெற்றிக்கு பா.ஜ.க.விடம் எஞ்சியிருக்கும் ஆயுதம் வகுப்புவாதம் மட்டுமே.. சீதாராம் யெச்சூரி தாக்கு

 
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மோடி அரசாங்கம் தவறி விட்டது… சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

தேர்தல்களில் வெற்றிக்கு பா.ஜ.க.விடம் எஞ்சியிருக்கும் ஆயுதம் வகுப்புவாதம் மட்டுமே என சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டினார்.

கேரளா மாநிலம் கொச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சீதாராம் யெச்சூரி கூறியதாவது:  இந்திய அரசியலமைப்பின் அடிப்படை அடித்தளங்களை குழிபறிக்கவும் தாக்கவும் பா.ஜ.க. அரசாங்கங்களால் திட்டமிட்ட அணுகுமுறை  உள்ளது. நடந்து கொண்டிருக்கும் மாநில சட்டப்பேரவை தேர்தலின்போது கூட மாதிரி நடத்தை விதிமுறைகள் மீறியதற்கு எதிராக தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பா.ஜ.க.

மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக வகுப்புவாதத்தை கூர்மைப்படுத்துவதே பா.ஜ.க.வின் ஒரே கவனம். வகுப்புவாதத்தை கூர்மைப்படுத்துவதன் மூலம் மட்டுமே மக்களின் ஆதரவை பெற முடியும் என்று அவர்கள் (பா.ஜ.க.) நினைக்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க.விடம் எஞ்சியிருக்கும் ஒரே தேர்தல் ஆயுதம் அதுதான் என்ற கட்டத்தை எட்டியுள்ளது. 

ஆர்.எஸ்.எஸ்.

இந்திய அரசியலமைப்பு அமைப்புமுறையான தாக்குதலையும்  அனைத்து சுதந்திர அமைப்புகளையும் கீழறுக்குவதை நாடு காண்கிறது. பாசிச ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா செயல்திட்டத்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தவும், மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசை மாற்றவும் பா.ஜ.க.வுக்கு இது தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.