அடமானம் வைத்த பொருளை முதலில் மீட்டுட்டு வாங்க; ஒத்தையா?ரெட்டையாங்கிறதை அப்புறம் பாத்துக்கலாம் - கி.வீரமணி

 
ep

அதிமுகவில் முன்பு இருந்தது போலவே இரட்டை தலைமை இருக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் விரும்ப,  எடப்பாடி பழனிச்சாமியோ ஒற்றைத் தலைமைக்கு அதிமுக மாற வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார்.  இந்த ஒத்தையா?ரெட்டையா? போட்டி தமிழக அரசியலில் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.  

தமிழகத்தின் பிரதான கட்சியான அதிமுக ஒரு எதிர்கட்சியாக இருந்து செயல்பட்டு வர வேண்டிய நேரத்தில்,  கட்சியின் தலைவர் யார்? என்பது நடந்து வரும் மோதல் குறித்து பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

i

 இந்த நிலையில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணியும் இதுகுறித்து விமர்சித்துள்ளார்.  தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய போது அதிமுகவின் இந்த மோதல் குறித்த கேள்விக்கு,   ’’உண்மையில் எதிர்க்கட்சி யார் என்கிற போட்டி போடக்கூடிய சூழல் இருக்கிறது.   ஆனால் எதிர்க்கட்சியில் யார் தலைவர் என்பதில் சிக்கலை ஏற்படுத்தி இருப்பது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது’’ என்றார்.

 அவர் மேலும்,   ’’அது குறித்து அதிமுகவில் ஒற்றைத் தலைமையா? இரட்டைத் தலைமையா? முக்கோணத் தலைமையா? என்று கேட்பதைவிட அடமானம் வைத்த பொருளை முதலில் அவர்கள் மீட்க வேண்டும்.  அதுதான் இப்போதைக்கு முக்கியம்.   மோடியா? லேடியா? என்று கேட்ட ஒரு கட்சி,   தற்போது மோடி தான் என்கிற திசையில் சென்று கொண்டிருக்கிறது.   தலைமையை முடிவு செய்வதற்கு முன்பாக தங்கள் கட்சியை அவர்கள் மீட்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி இருக்கிறார்.