இறைச்சி சாப்பிடுவது ஒரு பிரச்சினையா? பா.ஜ.க.வுக்கு வேறு வேலை இல்லை.. சித்தராமையா

 
ஏப்ரல் 14 வரை மதுரையில் இறைச்சி கடைகளுக்கு தடை!

இறைச்சி சாப்பிடுவது ஒரு பிரச்சினையா? பா.ஜ.க.வுக்கு வேறு வேலை இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா குற்றம் சாட்டினார்.


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையாக கடந்த 18ம் தேதியன்று குடகுக்கு சென்று இருந்தார். அப்போது கொல்லிப்பேட்டையில் உள்ள பசவேஸ்வரா கோயிலுக்கு சென்றார்.  அவர் அசைவ உணவை சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சித்தராமையாவை பா.ஜ.க. விமர்சனம் செய்தது. மூத்த எம்.எல்.ஏ. பசங்கவுடா பாட்டீல் யத்னால் கூறுகையில், உங்களுக்கு- சித்தராமையா தைரியம் இருந்தால், பன்றி இறைச்சியை சாப்பிட்டு விட்டு மசூதிக்கு செல்லுங்கள் என்று சவால் விடுத்தார்.

சித்தராமையா

அசைவ உணவு சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு சென்றதாக கூறப்படும் தன் மீதான குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: இறைச்சி சாப்பிடுவது ஒரு பிரச்சினையா? இது தனிப்பட்ட உணவு பழக்கம். நான் சைவம், அசைவம் என இரண்டையும் சாப்பிடுகிறேன். இது என் பழக்கம், சிலர் இறைச்சி சாப்பிடுவதில்லை, அது அவர்களின் உணவு பழக்கம். 

பா.ஜ.க.

பா.ஜ.க.வுக்கு வேறு வேலை இல்லை. நாட்டில் நடக்கும் முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப அவர்கள் சர்ச்சைகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். என்னை பொறுத்தவரை, இது ஒரு பிரச்சினை அல்ல. பலர் இறைச்சி சாப்பிடாமல், பலர் சாப்பிட்டுவிட்டுச் செல்கிறார்கள். பல இடங்களில் தெய்வங்களுக்கு இறைச்சி வழங்கப்படுகிறது. உண்மையை சொன்னால் அன்று நான் இறைச்சி சாப்பிடவில்லை. பின்னர் என்னிடம் உள்ளதை ஒரு வாதத்திற்காக கூறினேன். கோழிக்கறி இருந்தாலும், மூங்கில் கறியும், அக்கி ரொட்டியும்தான் சாப்பிட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.