கோலார் அல்லது வருணா தொகுதியில் போட்டியிடுவேன்.. கர்நாடக முன்னாள் முதல்வர் தகவல்

 
அப்படியே ‘ஆபரேஷன் லோட்டஸ்’ குறித்தும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு போடுங்க.. எடியூரப்பாவை நக்கல் செய்த சித்தராமையா…..

2023ம் ஆண்டில் நடைபெற உள்ள கோலார் அல்லது வருணா தொகுதியில் போட்டியிடுவேன் என்று கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சித்தராமையா தெரிவித்தார்.

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 2023ம் ஆண்டில் நடைபெற உள்ளது. எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து  இப்போது அரசியல் கட்சி தலைவர்கள் நாம் எந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்த வருகின்றனர்.

தேர்தல்

கர்நாடக காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான சித்தராமையா, எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், கோலார் அல்லது வருணை சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சித்தராமையாக கூறியதாவது: எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பாலும் கோலார் அல்லது வருணா சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடுவேன்.

காங்கிரஸ்

இருப்பினம் கட்சி தலைமை இறுதி முடிவு எடுக்கும். பாதாமி, கோலார் மற்றும் வருணா என 3 வாய்ப்புகள் இருந்தன. ஆனால் பாதாமி வெகு தொலைவில் உள்ளது. எங்களால் தொடர்ந்து பயணிக்க முடியாது. கோலாரில் போட்டியிடுமாறு என்ன அந்த தொகுதி மக்கள் அழைக்கிறார்கள். நான் மாட்டேன் என்று சொல்ல முடியாது. கட்சி தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அங்கே போடடியிடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.