2023 சட்டப்பேரவை தேர்தல்தான் என்னுடைய கடைசி தேர்தல்.. காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா அறிவிப்பு.

 
அப்படியே ‘ஆபரேஷன் லோட்டஸ்’ குறித்தும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு போடுங்க.. எடியூரப்பாவை நக்கல் செய்த சித்தராமையா…..

எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்தான் நான் போட்டியிடும் கடைசி தேர்தல் என கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கர்நாடக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா கூறியதாவது: இதை நான் தெளிவாக சொல்கிறேன், நீங்கள் (காங்கிரஸ் தொண்டர்கள்) இதை தெளிவாக எடுத்துக் கொள்ளுங்கள், நான் மீண்டும் சாமுண்டேஸ்வரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட மாட்டேன். சித்தராமையாக சாமுண்டேஸ்வரியில் போட்டியிடுவார் என்று யாரும் சொல்லக் கூடாது. 

பா.ஜ.க.

யாரையாவது (ஆண் அல்லது பெண்) வேட்பாளராக நிறுத்துவோம், அந்த நபரின் வெற்றியை உறுதி செய்வோம், அந்த நபர் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்துவோம். நான் ஏன போட்டியிடுகிறேன் தெரியுமா? இந்த ஊழல் அரசு போக வேண்டும், இந்த மதவாத செல்ல வேண்டும். நான் மீண்டும் போட்டியிட மாட்டேன். அதன் பிறகு (அடுத்த சட்டப்பேரவையின் காலத்துக்கு பிறகு) நான் எந்த பதவியையும் ஏற்கமாட்டேன். மாநிலங்களவை உறுப்பினர் அல்லது வேறு ஏதாவது பதவியையும் நான் ஏற்க மாட்டேன்.

டி.கே.சிவகுமார்

கர்நாடக காங்கிரஸில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாருக்கும், சித்தராமையாவுக்கும் இடையே அதிகார போட்டி நிலவுவதாக அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளராக தங்களை முன்னிலை படுத்துவதில் சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்தான் நான் போட்டியிடும் கடைசி தேர்தல் என்று சித்தராமையா அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.