கோவாவில் மட்டுமல்ல, எங்கும் ஆபரேஷன் கமலா செய்கிறார்கள்.. பா.ஜ.க.வை குற்றம் சாட்டிய சித்தராமையா

 
அப்படியே ‘ஆபரேஷன் லோட்டஸ்’ குறித்தும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு போடுங்க.. எடியூரப்பாவை நக்கல் செய்த சித்தராமையா…..

கோவாவில் மட்டுமல்ல, எங்கும் ஆபரேஷன் கமலா  (லோட்டஸ்) செய்கிறார்கள் என்று பா.ஜ.க. மீது கர்நாடக காங்கிரஸின் மூத்த தலைவர் சித்தராமையாக குற்றம் சாட்டினார். 

கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பெரும் பகுதியினர் பா.ஜ.க.வில் இணைய போவதாக உறுதிப்படுத்தாத தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும், கட்சி தாவ கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.40 கோடி வழங்குவதாக பா.ஜ.க. கூறியதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகாவில் கோவா போன்ற நிலை ஏற்பட சாத்தியமில்லை என்று கர்நாடக காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான சித்தராமையா தெரிவித்தார்.

பா.ஜ.க.

சித்தராமையா இது தொடர்பாக கூறுகையில், ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் ரூ.50 கோடி வழங்குவதன் மூலம் அவர்கள் (பா.ஜ.க.) ஜனநாயகத்தில் நம்பிக்கை கொள்ளவில்லை. கோவாவில் மட்டுமல்ல, எங்கும் ஆபரேஷன் கமலா  (லோட்டஸ்) செய்கிறார்கள். அவர்கள் பணம் கொடுப்பார்கள், எம்.எல்.ஏ.வை வாங்குவார்கள். கர்நாடகாவில் இது சாத்தியமில்லை என்று தெரிவித்தார்.

எம்.பி. பாட்டீல்

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. எம்.பி. பாட்டீல் கூறுகையில், ரூ.40 கோடிக்கு எம்.எல்.ஏ.க்களை வாங்குவது. நம் நாட்டின் சிஸ்டத்தை சீரழித்து விட்டது. நம் நாட்டில் இது போன்ற சம்பவங்கள் நடப்பதால் வெட்கப்படுகிறோம். கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் சேர வாய்ப்பே இல்லை. உண்மையில் பா.ஜ.க. மற்றும் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியினர் காங்கிரஸில் இணைவார்கள் என தெரிவித்தார்.