உங்க காலில் விழுந்து கெஞ்சணுமா? கொதித்தெழுந்த மம்தா
உங்கள் காலில் விழுந்து கெஞ்ச வேண்டுமா? என்று ஜிஎஸ்டி, 100 நாள் வேலை திட்ட விவகாரத்தில் மத்திய அரசு மீது மம்தா பானர்ஜி ஆவேசப்பட்டார்.
பழங்குடி இனத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். பின்னர் பழங்குடியினர் நலத்திட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது பேசிய மம்தா பானர்ஜி, 100 நாள் வேலையை திட்டத்திற்கு கட்டாயம் நிதி தேவைப்படுகிறது. இது குறித்து ஒரு வருடத்திற்கு முன்பே பிரதமரை நேரில் சந்தித்து பேசினேன். ஆனால் இதுவரைக்கும் எந்த பயனும் இல்லை . இதற்காக, உங்கள் காலில் விழுந்து கெஞ்ச வேண்டுமா? ஜனநாயகத்தில் தான் நாம் வாழ்கிறோமா? இந்தியா கட்சி நாடாக மாறிவிட்டதா? என்று ஆத்திரப்பட்டார்.
அவர் மேலும், எங்கள் பாக்கியத்தை எங்களிடம் கொடுத்து விடுங்கள். இது எங்கள் பணம். இல்லை என்றால் ஜிஎஸ்டியை ரத்து செய்யுங்கள். 100 நாள் வேலை திட்டத்திற்கான எங்கள் நிலுவைத் தொகையை நீங்கள் உடனே செலுத்த வேண்டும். இல்லை என்றால் உங்கள் நாற்காலியை விட்டு விடுங்கள். மாநிலத்திற்கு சேர வேண்டிய வரித்தொகையை நிறுத்தி வைத்து எங்களை நீங்கள் மிரட்டலாம். அதேபோல் எங்களாலும் ஜிஎஸ்டியை நிறுத்தி வைக்க முடியும் என்று எச்சரித்தார்.