மத்திய பிரதேசத்தில் முதல்வரை மாற்ற பா.ஜ.க. யோசனை.. சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு அடுத்த அடி?

 
மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வின் வெற்றி பெரிதாக இருக்கும்… முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நம்பிக்கை

பா.ஜ.க.வின் நாடாளுமன்ற குழுவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், சிவ்ராஜ் சிங் சவுகானை மத்திய பிரதேச முதல்வர் பதவியில் இருந்தும் நீக்க பா.ஜ.க. ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பா.ஜ.க. தனது முக்கிய அமைப்புகளில் அதிரடி மாற்றங்கள் செய்துள்ளது. பா.ஜ.க.வின் நாடாளுமன்ற குழு கட்சியின் உட்சபட்ச முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாகும். பா.ஜ.க இந்த குழுவை நேற்று அதிரடியாக மாற்றியமைக்கப்பட்டது. இந்த குழுவில் இடம் பெற்று இருந்த மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோ அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில், பா.ஜ.க.வின் நாடாளுமன்ற குழுவில் பி.எஸ்.எடியூரப்பா போன்ற தலைவர்கள் புதிதாக இடம் பெற்றள்ளனர்.

ஜே.பி.நட்டா

பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையிலான 11 பேர் கொண்ட  இந்த நாடாளுமன்ற குழுவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால், தேசிய செயலாளர் சுதா யாதவ், சத்தியநாராயண் ஜாதியா, கே.லட்சுமணன், பி.எல். சந்தோஷ் மற்றும் லால்புரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பா.ஜ.க.

பா.ஜ.க.வின் நாடாளுமன்ற குழுவிலிருந்து மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நீக்கப்பட்டதையடுத்து தொடர்ந்து அவர் முதல்வர் பதவியிலிருந்தும் நீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 2023 மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதேசமயம் மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வின் மிகப்பெரிய அடையாளம் சிவ்ராஜ் சிங் சவுகான் மேலும் மாநிலத்தில் நீண்ட காலம்  பணியாற்றும் முதல்வர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் என்பதால் அவரை அவ்வளவு எளிதாக முதல்வர் பதவியிலிருந்து நீக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.