அகிலேஷ் யாதவுக்கு முதிர்ச்சி இருந்திருந்தால் சமாஜ்வாடி ஆட்சி அமைத்திருக்கும்.. சிவ்பால் யாதவ் தாக்கு

 
சிவ்பால் யாதவ்

அகிலேஷ் யாதவுக்கு முதிர்ச்சி இருந்திருந்தால், 2022ல் சமாஜ்வாடி ஆட்சி அமைத்திருக்கும், அவர் முதல்வராக இருந்திருப்பார் என்று அகிலேஷ் யாதவை முதிர்ச்சியில்லாதவர் என்று அவரது சித்தப்பா சிவ்பால் யாதவ் தாக்கினார்.

அண்மையில நடந்து முடிந்த குடியரசு தலைவர் தேர்தலில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு அளித்தது. ஆனால் சமாஜ்வாடி கூட்டணியில் இடம் பெற்று இருந்த ஓம் பிரகாஷ் ராஜ்பர் கட்சியும், சிவ்பால் யாதவும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் சமாஜ்வாடி கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான பிளவு மேலும் பெரிதானது. இந்நிலையில், இந்நிலையில், ஓம் பிரகாஷ் ராஜ்பருக்கும், சிவ்பால் யாதவுக்கு கூட்டணியிலிருந்து வெளியேறலாம் என்பதை மறைமுகமாக உங்களுக்கு அதிக மரியாதை கிடைப்பதாக நீங்கள் நினைக்கு இடத்துக்கு செல்ல நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள் என்று சமாஜ்வாடி கடிதம் எழுதியது.

அகிலேஷ் யாதவ்
இது தொடர்பாக சிவ்பால் யாதவ் கூறியதாவது: எனக்கு அதிகாரப்பூர்வ சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தேன். இது முதிர்ச்சியின்மை என்று நினைக்கிறேன். நான் தேர்தலில் போட்டியிட்டபோது எனது கட்சியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு சமாஜ்வாடி கட்சியில் உறுப்பினராக சேர்ந்தேன். அவர்கள் (சமாஜ்வாடி) என்னை சட்டமன்ற கட்சியிலிருந்து நீக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். கட்சியில் இருந்து எனக்கு முக்தி கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

சமாஜ்வாடி

எனக்கு இது போன்ற கடிதங்கள் எழுதப்படும்போது, சட்டமன்ற கட்சி கூட்டங்களுக்கு என்னை அழைக்கவில்லை அல்லது எனது ஆலோசனைகளை ஏற்கவில்லை. முக்தி கொடுத்திருந்தால் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு இருக்காது. கட்சி எங்கே இருந்தது, இப்போது எங்கு சென்றுள்ளது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த முதிர்ச்சி இருந்திருந்தால், 2022ல் சமாஜ்வாடி ஆட்சி அமைத்திருக்கும், அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்திருப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.