அகிலேஷ் யாதவை இனி இளைய நேதாஜி என்று அழையுங்க.. மெயின்புரி மக்களிடம் ஷிவ்பால் யாதவ் வேண்டுகோள்

 
சிவ்பால் யாதவ்

அகிலேஷ் யாதவை இனி இளைய நேதாஜி என்று அழைக்க வேண்டும் என்று மெயின்புரி மக்களுக்கும், சமாஜ்வாடி கட்சியினருக்கும் ஷிவ்பால் யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மெயின்புரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஜஸ்வந்த் நகரில் சமாஜ்வாடி கட்சி சார்பில் நடைபெற்ற  தேர்தல் பிரச்சார கூட்டத்தில், அந்த தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளராக போட்டியிடும் டிம்பிள் யாதவ், அகிலேஷ் யாதவ் மற்றும் சிவ்பால் யாதவ் ஆகியோர் பங்கேற்றனர். மேடையில் தனது சித்தப்பா  சிவ்பால் யாதவின் காலை தொட்டு அகிலேஷ் யாதவும் அவரது மனைவி டிம்பிள் யாதவும் வணங்கினர். அந்த கூட்டத்தில் சிவ்பால் யாதவ் பேசுகையில் கூறியதாவது: நேதாஜி (முலாயம் சிங் யாதவ்) போன்ற தலைவர் யாரும் இல்லை என்று நீங்கள் (அகிலேஷ் யாதவ்) கர்ஹாலில் சொன்னீர்கள். 

இறந்தது முலாயம் சிங் யாதவ்தான்.. ஆனால் அவர் இவரில்லை… குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த மருமகள்

மெயின்புரி மற்றும் சைஃபை மக்கள் அவரை (முலாயம் சிங் யாதவ்) மூத்த அமைச்சர் என்றும், என்னை இளைய அமைச்சர் என்றும் அழைக்கப்பட்டதை நான் சொல்ல விரும்புகிறேன். இப்போது நீங்கள் அனைவரும் அகிலேஷை இளைய நேதாஜி என்று அழைக்க வேண்டும். டிம்பிள் யாதவ் என்னுடைய மருமகள் மற்றும் தேர்தலில் போட்டியிடுபவர். மெயின்புரி இடைத்தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வாக்கு வித்தியாசத்தில் டிம்பிள் யாதவ் வெற்றி பெற உதவுமாறு  மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன். சிலர் (பா.ஜ.க. வேட்பாளர் ரகுராஜ் சிங் ஷக்யா) தங்களை சீடன் என்று அழைக்கிறார்கள். ஆனால் அவர்கள் அப்படி இல்லை. உண்மையான சிஷ்யன் எப்போதும் வெளியேறாமல் அனுமதி பெறுவார். அவருக்கு எழுத்தராக வேலை கிடைத்தது ஆனால் நான் அவரை ராஜினாமா செய்ய வைத்து இரண்டு முறை எம்.பி.யாக உதவினேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொய்களை சொல்வதில் பா.ஜ.க. உலக சாதனை படைத்து வருகிறது…. அகிலேஷ் யாதவ் தாக்கு

மெயின்புரி மற்றும் எட்டாவா மக்களும், சமாஜ்வாடி கட்சியினரும் முலாயம் சிங் யாதவை நேதாஜி என்று அன்பாக அழைப்பது வழக்கம். உத்தர பிரதேசம் மாநிலம் மெயின்புரி மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்த  சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் கடந்த அக்டோபர் 10ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து அந்த தொகுதிக்கு டிசம்பர் 5ம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. சமாஜ்வாடி கட்சியின் கோட்டையாக கருதப்படும் மெயின்புரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் அந்த கட்சி வேட்பாளராக மறைந்த முலாயம் சிங் யாதவின் மருமகளும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளராக ரகுராஜ் சிங் ஷக்யா போட்டியிடுகிறார்.