பார்ப்பனருக்கு பின்புத்தி: பார்ப்பன அடிமைகளுக்கும் பின்புத்திதான் -கொளத்தூர் மணி

 
கொ

நடராஜர் காலை தூக்கி நிற்க இதுதான் காரணம். மனசு புண்பட்டா கம்பெனி பொறுப்பாகாது என்று தலைப்பில், யூடியூப்பர்  U2 Brutus வீடியோவை வெளியிட்டிருந்தார்.   ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய,  இந்து மதம் எங்கே போகிறது? என்ற புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்த விசயங்களை எடுத்து இந்த வீடியோவில் பேசியிருந்தார்.  

இது இந்து மக்களை புண்படுத்திவிட்டது.  இந்து கடவுளை அவமதித்து விட்டார் என்று பாஜகவினர் கொதித்தெழுந்துள்ளனர்.  இதற்கு அந்த யூடியூபர்,  ’’நான் சொல்றது பொய்யிண்ணா உண்மை கதைய நீ சொல்றா வெண்ண... ஆதாரம் : இந்து மதம் எங்கே போகிறது. தி.க. காரவங்க எழுதுன புக் இல்ல... ராமானுஜ தாத்தாச்சாரியார் எனும் பார்ப்பனர் எழுதுன புக்தான்..’’.என்று பதிலடி கொடுத்திருந்தார்.


அவர் மேலும்,  ’’நடராஜரை இழிவுபடுத்திவிட்டேன் என்று மதத்தின் பெயரை வைத்து கலவரம் செய்யும் ஒரு கும்பல் கூவிக்கொண்டு இருக்கிறது. இந்த விசயத்தை வைத்து மதக்கலவரம் கூட செய்வோம்னு பப்ளிக்கா மிரட்டலே விடுது. நான் வீடியோவில் பேசியதற்கான ஆதாரம் கொடுத்துள்ளேன். ஒரு வேலை இது பொய் என்றால் உண்மை கதையை கூறவும். பேசாம போய்ருந்தா ஒரு வீடியோவோட போய்ருக்கும்... இப்ப அந்த புத்தகத்த ஊரே படிச்சு காறித்துப்ப போகுது... இந்தா வாய்ங்கோ...’’ என்கிறார்.

தொடர்ந்து அவர்,  ‘’இவர் நம் சிவபெருமானை இழிவுபடுத்தி எப்படி எழுதியிருக்கிறார் பாருங்க.  இந்த புத்தகத்தை தடை செய்ய வேண்டும்... அப்டினு கிளம்புங்கடா... தெம்பு திராணி இருக்காடா..’’ என்று கேட்கிறார்.


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசுவும்,  ‘’அக்னிஹோத்ர ராமானுஜ தாத்தாச்சாரியர் சொன்னால் சரி? @U2Brutus_off சொன்னால் தவறா? நடராஜர் எதற்காக ஆடினார் என்பதை இந்து மதம் எங்கே போகிறது? நூலில் ஆச்சார்யார் எழுதியதை  தம்பி மைனர் கோனார் உரை எழுதியதற்காக பார்ப்பன எடுபிடிகள் கொதிப்பது ஏன்?’’என்று கேட்கிறார்.

இந்த விவகாரத்தில் திராவிடர் விடுதலை கழகம் தலைவர் கொளத்தூர் மணி,  ‘’பார்ப்பனருக்கு பின்புத்தி என்பார்கள்; இப்போதுதான் தெரிகிறது பார்ப்பன அடிமைகளுக்கும் @annamalai_k அப்படித்தான் என்று. @U2Brutus_off இல் சிதம்பரம் நடராஜரைப் பற்றிப் பேசியது, பின்புத்திக்காரர்களால் 1,25,000 பேருக்கு மேலாக பார்வையாளர்கள் எண்ணிக்கையை கூட்டியுள்ளது’’ என்கிறார்.


அவர் மேலும்,  ‘’எப்படிப் பிரித்துப் பார்ப்பது?   " எல்லா புராணங்களையும் தடை செய்!" ..... என்பதே பொருத்தமாக இருக்கும். பாஜக  @BJP4TamilNadu
 செய்யுமா?’’ என்று கேட்கிறார்.

’’குறைந்த 'பக்ஷம்' .... " அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரி ஒழிக!" " இனத் துரோகி தாத்தாச்சாரி ஒழிக!"  என்றாவது சொல்ல வேண்டும்’’ என்றும் பதிலடி கொடுத்திருக்கிறார்.