இந்துத்துவா பற்றி உரக்க கூச்சலிடுகிறார்கள். ஆனால் இந்துக்கள் ஆபத்தில் இருக்கும்போது பா.ஜ.க. வாய் திறக்கவில்லை.. சிவ சேனா

 
சிவ சேனா

இந்துத்துவா மற்றும் தேசியவாதம் பற்றி தங்கள் தொண்டை உரக்க கூச்சலிடுகிறார்கள். ஆனால் இந்துக்கள் உண்மையான ஆபத்தில் இருக்கும்போது அவர்கள் வாய் திறக்கவில்லை என காஷ்மீரில் இந்துக்கள் கொல்லப்படுவது குறித்து பா.ஜ.க.வை சிவ சேனா குற்றம் சாட்டியது

சிவ சேனாவின் அரசியல் ஊதுகுழலா சாம்னா பத்திரிகையில் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 எப்படி ரத்து செய்யப்பட்டது மற்றும் பாகிஸ்தானை தளமாக கொண்ட தீவிரவாதிகள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது என்பதை விளம்பரப்படுத்துவதில் பா.ஜ.க. மும்முரமாக உள்ளது. காஷ்மீரி பண்டிட்டுகளின் துன்பங்களை அவர்கள் (பா.ஜ.க.) பொருட்படுத்தாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. 

காஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவு நீக்கம்

பள்ளத்தாக்கில் இந்துக்கள் கொல்லப்படுவது குறித்து பா.ஜ.க.வும், மத்திய அரசும் அமைதியாக இருக்கிறது. காஷ்மீர் மக்கள் அவதிப்படும் வேளையில், மன்னர் (மோடி அரசின் 8வது ஆண்டு விழா) கொண்டாட்டங்களில் மும்முரமாக இருக்கிறார். சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் பா.ஜ.க. அரசியல் ஆதாயம் பெற்றாலும், காஷ்மீரில் நிலைமை மோசமடைந்து, இந்துக்கள் இன்னும் கொல்லப்படுகிறார்கள். பா.ஜ.க. வேறு ஒரு அங்கத்தால் ஆனது போல் தெரிகிறது. 

பா.ஜ.க.

இவர்கள் இந்துத்துவா மற்றும் தேசியவாதம் பற்றி தங்கள் தொண்டை உரக்க கூச்சலிடுகிறார்கள். ஆனால் இந்துக்கள் உண்மையான ஆபத்தில் இருக்கும்போது அவர்கள் வாய் திறக்கவில்லை. பள்ளத்தாக்கில் இந்துக்கள் கொல்லப்படுவதை பற்றி பா.ஜ.க.வும் மத்திய அரசும் அமைதியாக இருக்கின்றன. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம் என்ன பலன் கிடைத்தது?. காஷ்மீரில் எத்தனை பேர் நிலம் வாங்கியுள்ளனர்?. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.