தாக்கரே சர்கார் என்று சொல்லுகிறோம் ஆனால் உண்மையான பலனை பவார் சர்கார் எடுத்துக் கொள்கிறது.. சிவ சேனா எம்.பி.

 
நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும்…..கொந்தளித்த சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே! சூடு பிடிக்கும் ஆரே விவகாரம்

மகாராஷ்டிரா அரசாங்கத்தை தாக்கரே சர்கார் என்று சொல்லுகிறோம் ஆனால் உண்மையான பலனை பவார் சர்கார் எடுத்துக் கொள்கிறது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியை சிவ சேனா எம்.பி. விமர்சனம் செய்து இருப்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியில் உள்ள டபோலியில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த சிவ சேனா தலைவர்கள், எம்.எல்.ஏ. யோகேஷ் கடம் மற்றும் சிவ சேனா எம்.பி. கஜனன் கிர்த்திகர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சிவ சேனா எம்.பி. கஜனன் கிர்த்திகர் உரையாற்றுகையில் கூறியதாவது:  இங்கு (ரத்னகிரி) எந்த தேர்தலிலும் நான் போட்டியிட விரும்பவில்லை. 

கஜனன் கிர்த்திகர்

மும்பையில், முதல்வர் மற்றும் நகர் விகாஸ் நிதியாக எங்களுக்கு போதுமான நிதி கிடைக்கிறது. கிராமப்புறங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பல கிராமங்களை கவனித்துக் கொள்ள வேண்டும். இது போன்ற சமயங்களில் என்னால் முடிந்த உதவிகளை வழங்குகிறேன். அரசிடம் இருந்து நிதி பெற கடும் போட்டி நிலவுகிறது. நான் தேசியவாத காங்கிரஸ் பெயரை குறிப்பிட விரும்புகிறேன். 

தேசியவாத காங்கிரஸ்

நாம் இதை (மகாராஷ்டிரா அரசாங்கம்) தாக்கரே சர்கார் என்று சொல்லுகிறோம் ஆனால் உண்மையான பலனை பவார் சர்கார் எடுத்துக் கொள்கிறது. இதுவே அரசாங்கத்தில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சிவ சேனா எம்.பி. வெளிப்படையாக விமர்சனம் செய்து இருப்பது ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியள்ளது