தேசியவாத காங்கிரஸூம், காங்கிரஸூம் சிவ சேனாவுக்கு அநீதி செய்து வருகின்றன... சிவ சேனா எம்.எல்.ஏ. பகீர் குற்றச்சாட்டு

 
சிவ சேனா

தேசியவாத காங்கிரஸூம், காங்கிரஸூம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் இப்போது இரு கட்சிகளும் சிவ சேனாவுக்கு அநீதி செய்து வருகின்றன என சிவ சேனா எம்.எல்.ஏ. தானாஜி சாவந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது ஆளும் கூட்டணி கட்சிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது போல் தெரிகிறது. அரசாங்கத்தில் சிவ சேனா இரண்டாம் தரமாக நடத்தப்படுவதாக அந்த கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் வெளிப்படையாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோலாப்பூரில் நடைபெற்ற சிவ சேனா கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட அந்த கட்சியின் எம்.எல்.ஏ. தானாஜி சாவந்த் பேசுகையில் கூறியதாவது: கொங்கன், மேற்கு மகாராஷ்டிரா, மராத்வாடா அல்லது விதர்பாவை சேர்ந்த சிவவேனாவின் மூத்த தலைவர்கள் அனைவருக்கும் பொதுவான கருத்து உள்ளது.

தானாஜி சாவந்த்

அரசாங்கத்தில் கட்சி (சிவ சேனா) இரண்டாம் தரமாக நடத்தப்படுகிறது, அதுவே மாநில பட்ஜெட்டிலும் பிரதிபலிக்கிறது.  நம் கட்சியால்தான் தேசியவாத காங்கிரஸூம், காங்கிரஸூம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் இப்போது இரு கட்சிகளும் சிவ சேனாவுக்கு அநீதி செய்து வருகின்றன. சமீபத்தில் சமர்ப்பிக்க்பபட்ட பட்ஜெட்டில் செய்யப்பட்ட மொத்த ஒதுக்கீட்டில் தேசியவாத காங்கிரஸ் அமைச்சர்கள் தலைமையிலான துறைகள் 57 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை பெற்றுள்ளன. சிவ சேனா அமைச்சர்களின்கீழ் உள்ள மற்ற துறைகளுக்கு வெறும் 16 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது. 

தேசியவாத காங்கிரஸ்

காங்கிரஸ் அமைச்சர்கள் தலைமையிலான  துறைகளுக்கு 30 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை நிதி ஒதுக்கப்பட்டது. உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இலாகா சிவ சேனா வசம் உள்ளது. இந்த துறைக்கு 16 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 6 சதவீதம் சம்பளத்துக்கு செல்கிறது. வளர்ச்சிக்கான ஒதுக்கீடு என்ன? கிராமப்புற வளர்ச்சித் துறை தேசியவாத காங்கிரஸ் கீழ் இருப்பதால், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு கிராம பஞ்சாயத்து உறுப்பினர் கூட ரூ.1 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை பெறுகிறார் என்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து உள்ளூர் கட்சி தலைவர்களிடமிருந்து எனக்கு அழைப்புகள் வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.