லம்பி வைரஸ் விவகாரம்.. நானா படோல் மகாராஷ்டிராவின் ராகுல் காந்தி.. பா.ஜ.க. தாக்கு

 
மத்திய பிரதேசம், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பெகாசஸை மத்திய அரசு பயன்படுத்தியது.. நானா படோல் பகீர் குற்றச்சாட்டு

லம்பி வைரஸ் பரவலுக்கும், அண்மையில்  நமீபியாவிலிருந்து சிறுத்தைகள் கொண்டு வந்ததையும் தொடர்புபடுத்தி பேசிய நானா படோலை மகாராஷ்டிராவின் ராகுல் காந்தி என்று பா.ஜ.க. கிண்டல் செய்துள்ளது.

நம் நாட்டில் சில மாநிலங்களில் கால்நடைகளை தாக்கும் லம்பி வைரஸ் பரவி வருகிறது.  லம்பி வைரஸ் பரவலுக்கும், அண்மையில்  நமீபியாவிலிருந்து சிறுத்தைகள் கொண்டு வந்ததையும் தொடர்புபடுத்தி மத்திய அரசை தாக்கி காங்கிரஸ் பேசியுள்ளது. மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் கடந்த சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசுகையில், நைஜீரியாவில் நீண்ட காலமாக லம்பி வைரஸ் பரவி வருகிறது. சிறுத்தைகள் அங்கிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் வகையில் மத்திய அரசு வேண்டுமென்றே இதை செய்துள்ளது. 

சிறுத்தைகள்

வெளிநாட்டில் இருந்து சிறுத்தைகளை வரவழைப்பதால் நாட்டின் விவசாயிகளின் பிரச்சினைகள், பணவீக்கம் மற்றும் வேலையின்மை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது. ஆனால் இதையும் மீறி, சிறுத்தைகள் வேட்டையாடுவதற்காக கொண்டு வரப்பட்டன, அதை தொடர்ந்து நம் நாட்டில் லம்பி வைரஸ் பரவியது. கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு அரசு ரூ.700 போனஸ் வழங்கியது, இந்த ஆண்டு போனஸாக ரூ.1,000 வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.

ஷெசாத் பூனவல்லா

பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா டிவிட்டரில், லம்பி வைரஸ் நைஜீரியாவில் உருவானது என்றும், மோடி ஜி சிறுத்தைகளை கொண்டு வந்ததால் வந்தது என்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த ராகுல் காந்தி என்கிற நானா படோல் கூறுகிறார். சிறுத்தைகள் நமீபியாவிலிருந்து வந்தவை. நைஜீரியாவும், நமீபியாவும் வெவ்வேறு நாடுகள் என்பது அவருக்கு தெரியுமா? காங்கிரஸ் எப்போதும் இது போன்ற பொய்களையும், வதந்திகளையும் பரப்பி வருகிறது. கோதுமையை கிலோவுக்கு பதிலாக லிட்டரில் எங்கே அளக்கிறார்கள்? எங்கே போலி செய்திகள் பொதுவானவை? போலிச் செய்திகள் மற்றும் பொய்களின் மிகப்பெரிய திசையன் காங்கிரஸ் என பதிவு செய்துள்ளார்.