தேசத்துக்கு எதிராக பேசிய ஜெர்மி கார்பினுடன் சந்திப்பு.. ராகுல் எப்போதும் இந்திய எதிரிகளிடம் கைகோர்ப்பு. பா.ஜ.க.

 
ராகுல் காந்தி

இந்தியாவுக்கு எதிராக பேசியவரான ஜெர்மி கார்பினை ராகுல் காந்தி சந்தித்து பேசியதை குறிப்பிட்டு, ஏன் ராகுல் காந்தி எப்போதும் ஏன் இந்திய எதிரிகளிடம் கைகோர்க்கிறார் என்று பா.ஜ.க. கேள்வி எழுப்பியுள்ளது.

இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவரும், அந்நாட்டு எம்.பி.யுமான ஜெர்மி கார்பின் முன்பு இந்திய விரோத மற்றும் இந்து விரோத மற்றும் இந்தியாவிலிருந்து காஷ்மீரை பிரிக்க வேண்டும் பேசியவர். இவரது கருத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் காங்கிரஸ் கூட ஜெர்மி கார்பின் கருத்துக்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்தது. 

ராகுல் காந்தி, ஜெர்மி கார்பின் (நடுவில்)

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது லண்டன் பயணத்தின்போது ஜெர்மி கார்பினை சந்தித்து பேசியுள்ளார். இந்திய ஓவர்சீஸ் காங்கிரஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், ராகுல் காந்தி, ஜெர்மி கார்பினுடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து இருந்தது. இது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. தேச விரோத சக்தியை ராகுல் காந்தி ஏன் சந்தித்தார் என்று பா.ஜ.க. கேள்வி எழுப்பியுள்ளது.

ஷெஹ்சாத் பூனாவாலா

பா.ஜ.க.வின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா டிவிட்டரில், காஷ்மீர் தொடர்பான பாகிஸ்தான் பிரச்சாரத்தை எதிரொலிக்கும் ஜெர்மி கார்பின் போன்ற இந்திய விரோத சக்திகளை சந்தித்தாலோ அல்லது சீனர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலோ அல்லது சீன பணத்தை ஆர்.ஜி.எப்.ல் எடுத்துக் கொண்டாலோ அல்லது டோக்லாம் போது சீனர்களை சந்தித்தாலோ சரி.  ஏன் ராகுல் காந்தியின் கை எப்போதும் இந்திய எதிரிகளிடம் உள்ளது? மோடிக்கு எதிராக இந்திய எதிர்ப்பு போராட்டம் ஏன்? என பதிவு செய்து இருந்தார்.