சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் கைது.. அரசு நிறுவனங்கள் அரசியல் நோக்கத்திற்காக இல்லை... காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்

 
சஞ்சய் ரவுத்

அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்தப்படுகிறது. அரசு நிறுவனங்கள் (மத்திய புலனாய்வு அமைப்புகள்) அரசியல் நோக்கத்திற்காக  இல்லை என்று சஞ்சய் ரவுத் கைது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.

பத்ரா சால் நில ஊழல் வழக்கு தொடர்பாக சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத்தின் வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது கணக்கில் காட்டாத ரூ.11 லட்சத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். சோதனையின் முடிவில் சஞ்சய் ரவுத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து அழைத்து சென்றனர். அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

சசி தரூர்

சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத்தை அமலாக்கத்துறை கைது செய்தது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்தப்படுகிறது. அரசு நிறுவனங்கள் (மத்திய புலனாய்வு அமைப்புகள்) அரசியல் நோக்கத்திற்காக  இல்லை. அவர்கள் (மத்திய புலனாய்வு அமைப்புகள்) ஒரு குறிப்பிட்ட வேலையை செய்ய வேண்டும். நீங்கள் (மத்திய பா.ஜ.க. அரசு) எதிர்க்கட்சியினரை தேர்ந்தெடுக்கும் அசாதாரணமான இலக்கை அடைந்துள்ளீர்கள். 

எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

மேலும் இது ஏற்றுக் கொள்ள முடியாததாக நான் கருதுகிறேன் ஏனென்றாம் நாம் ஜனநாயகம் மதிப்புள்ள ஒரு நாடு, அது பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.  முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மல்லிகார்ஜூன் கார்கே  பேசுகையில், அவர்கள் (பா.ஜ.க.)  எதிர்க்கட்சி இல்லாத நாடாளுமன்றத்தை விரும்புகிறார்கள். அதனால்தான் சஞ்சய் ரவுத்துக்கு எதிராக நடவடிக்கை. பணவீக்கம், குஜராத் கள்ளசாராயம் சோகம் போன்ற பிரச்சினைகளை நாங்கள் நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என தெரிவித்தார்.