இன்று மக்கள் பா.ஜ.க. விரும்பியதை வழங்கியுள்ளனர்.. ஒரு நாள் பா.ஜ.க.வை வாக்காளர்கள் ஆச்சரியப்படுத்துவார்கள்.. சசி தரூர்

 
உள்நாட்டுல கருத்து வேறுபாடு இருக்கும் ஆனா வெளிநாட்டுல நாங்க எல்லாம் ஒன்னு- சசி தரூர்

ஒரு நாள் இந்திய வாக்காளர்கள் பா.ஜ.க.வை ஆச்சரியப்படுத்துவார்கள். ஆனால் இன்று மக்கள் அவர்களுக்கு (பா.ஜ.க.) அவர்கள் விரும்பியதை வழங்கியுள்ளனர் என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பேசுகையில் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி அபாரமான வீரியமும் சுறுசுறுப்பும் கொண்டவர், குறிப்பாக அரசியல் ரீதியாக மிகவும் ஈர்க்கக்கூடிய சில விஷயங்களை செய்துள்ளார். அவர் இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் வெற்றி பெற்றார். 

பிரதமர் மோடி

நம் நாட்டை வகுப்புவாத மற்றும் மத அடிப்படையில் பிளவுப்படுத்தும் சில சக்திகளை அவர் (மோடி) கட்டவிழ்த்துவிட்டார், அது என்னை பொறுத்தவரை ஒரு நச்சுத்தன்மையை அறிமுகப்படுத்துகிறது துரதிர்ஷ்டவசமானது.  உத்தர பிரதேச தேர்தல் முடிவுகள் முன்கூட்டிய முடிவு என்று அரசியல் ஆய்வாளர்கள் விவரித்ததில் நான் ஆச்சரியடைந்தேன். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளிவரும் வரை பா.ஜ.க.வின் வெற்றியை வெகு சிலரே கணித்தனர். 

பா.ஜ.க.

ஒரு நாள் இந்திய வாக்காளர்கள் பா.ஜ.க.வை ஆச்சரியப்படுத்துவார்கள். ஆனால் இன்று மக்கள் அவர்களுக்கு (பா.ஜ.க.) அவர்கள் விரும்பியதை வழங்கியுள்ளனர். இத்தகைய பெரும்பான்மையுடன் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பலர் எதிர்பார்க்கவில்லை. சமாஜ்வாடி கட்சியின் இடங்கள் அதிகரித்துள்ளன. எனவே அது ஒரு நல்ல எதிர்க்கட்சி என்பதை நிரூபிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.