கட்சியின் பெரிய தலைவர்களிடமிருந்து நான் எந்தவித ஆதரவையும் எதிர்பார்க்கவில்லை... சசி தரூர்

 
சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட சசி தரூருக்கு அரஸ்ட் வாரண்ட்!

கட்சியின் பெரிய தலைவர்களிடமிருந்து நான் எந்தவித ஆதரவையும் எதிர்பார்க்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் தேர்தலில போட்டியிடும் சசி தரூர் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அந்த கடசியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் சசி தரூர் போட்டியிடுகின்றனர். சசி தரூர் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கட்சியின் பெரிய தலைவர்களிடமிருந்து நான் எந்தவித ஆதரவையும் எதிர்பார்க்கவில்லை. இப்போதும் அதை எதிர்பார்க்கவில்லை. உண்மையில் நான் நாக்பூர், வார்தா மற்றும் ஹைதராபாத்தில் கட்சி தொண்டர்களை சந்தித்தேன். அவர்கள்தான் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் என்னை போட்டியிட சொன்னார்கள், பின்வாங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார்கள். 

எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

நான் பின்வாங்க மாட்டேன் என்று உறுதியளித்தேன். இதுவரை எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன். அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் எனக்கு முன்னேற பலம் தருகிறது. கேரள காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன் கார்கேவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து இருப்பது, என்னை ஆதரவு அளிப்பவர்களின் ஊக்கத்தை கெடுக்கலாம். ஆனால் நான் அதை சொல்லவில்லை. மக்கள் மனதில் என்ன நடக்கிறது என்பதை நான் புரிந்து கொள்ள தேவையில்லை. 

கே.சுதாகரன்

ஒன்றை சொல்கிறேன் ஒருவர் ரகசியமாகவோ அல்லது பகிரங்கமாகவோ எதை சொன்னாலும் வாக்கு சீட்டு ரகசியமாக இருக்கும். யார் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. மக்கள் தங்கள் விருப்பம் மற்றும் நம்பிக்கைகளுக்கு ஏற்ப வாக்களிக்கலாம். கட்சியை யார் வலுப்படுத்த வேண்டும்  மற்றும் எதிர்காலத்தில் சவால்களை எதிர்கொள்ள அதை தயார் செய்ய முடியும் என்பதை அவர்கள் முடிவு செய்யலாம். கார்கே ஆதரிப்பது சுதாகரனின் தனிப்பட்ட விருப்பம் அதில் தவறில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.