எந்த மாநிலத்தில் இருந்து யாருக்கு அதிக வாக்குகள் கிடைத்தன என்பது யாருக்கும் தெரியாது.. சசி தரூர் தகவல்

 
சசி தரூர்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் எந்த மாநிலத்தில் இருந்து யாருக்கு அதிக வாக்குகள் கிடைத்தன என்பது யாருக்கும் தெரியாது ஆகையால் தைரியமாக எனக்கு வாக்களியுங்கள் என்று காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு  சசி தரூர் மறைமுகமாக வேண்டுகோள் விடுத்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சசி தரூர் மற்றும் மல்லிகார்ஜூன் கார்கே ஆகியோர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தல் நாளை பெற உள்ளதால் இரு தலைவர்களும் தீவிரமாக ஆதரவு திரட்டி வருகின்றனர். 

எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

இந்நிலையில், ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட் கடந்த சில தினங்களுக்கு முன், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன் கார்கேவுக்கு வெளிப்படையாக ஆதரவை வழங்கினார். மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மற்ற காங்கிரஸ் பிரதிநிதிகளும் கார்கேவுக்கு வாக்களிக்குமாறு அசோக் கெலாட் கேட்டுக் கொண்டார். இது, காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு முரணானது.

கட்சியின் முதுகில் குத்திவிட்டார்… சச்சின் பைலட் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்.. அசோக் கெலாட் ஆவேசம்

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மற்றொரு போட்டியாளரான சசி தரூர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: சில மாநிலங்களில் சில தலைவர்கள் வாக்களிக்கும் வழிகாட்டல்களை (யாருக்கு வாக்களிக்க வேண்டும்) வழங்க முயன்றனர். அவர்கள் சொல்வதை கேட்கவில்லை என்றால் அதன் விளைவுகளை கண்டு மக்கள் பயப்படுகிறார்கள். நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். எந்த மாநிலத்தில் இருந்து யாருக்கு அதிக வாக்குகள் கிடைத்தன என்பது யாருக்கும் தெரியாது. ஏனெனில் வாக்களிப்பது பெயர் அறியப்படாததாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.