நான் யாருக்கும் பயப்படவில்லை, யாரும் என்னை கண்டு பயப்படத் தேவையில்லை... காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் விளக்கம்

 
சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட சசி தரூருக்கு அரஸ்ட் வாரண்ட்!

கேரள காங்கிரஸில் தரூர் குழு தோன்றுவதாக  கட்சியின் ஒரு பிரிவினர் அச்சப்படுவதாக கூறப்படுவது குறித்து, நான் யாருக்கும் பயப்படவில்லை, யாரும் என்னை கண்டு பயப்படத் தேவையில்லை என்று சசி தரூர் தெரிவித்தார்.

காங்கிரஸ்  கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் கேரள மாநிலம் மலபார் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) கட்சியின் மூத்த தலைவர்களையும் சசி தரூர் சந்தித்து  பேசி வருகிறார். இது கேரள காங்கிரஸில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

கேரள காங்கிரஸில் சசி தரூருக்கு அதிகரித்து வரும் ஆதரவு மற்றும் மாநிலத்தில் கட்சிக்குள் தரூர் குழு தோன்றுகிறது என்ற அச்சத்தில்  அம்மாநில காங்கிரஸ் தலைமையின் ஒரு பிரிவினர் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், சசி தரூர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சசி தரூரிடம், உங்களது சுற்றுப்பயணத்தால் யார் பயப்படுகிறார்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

காங்கிரஸ்

அதற்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பதிலளிக்கையில் கூறியதாவது: நான் யாருக்கும் பயப்படவில்லை, யாரும் என்னை கண்டு பயப்படத் தேவையில்லை. கேரள மாநில காங்கிரஸூக்குள் நான் எந்த ஒரு குழுவையும் உருவாக்க விரும்பவில்லை.  பனக்காட்டில் உள்ள சாதிக் அலில் ஷிஹாப் தங்கல் இல்லத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களை சந்தித்தது, அந்த மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் நடந்த மரியாதை நிமித்தமான சந்திப்பு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.