கட்சிக்குள் மாற்றம் வேண்டுமானால் எனக்கு வாக்களிக்கலாம் .. காங்கிரஸ் பிரதிநிதிகளிடம் சசி தரூர் வேண்டுகோள்

 
சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட சசி தரூருக்கு அரஸ்ட் வாரண்ட்!

கட்சிக்குள் மாற்றம் வேண்டுமானால் எனக்கு வாக்களிக்கலாம் என்று காங்கிரஸ் பிரதிநிதிகளிடம் தலைவர் தேர்தலில் போட்டியிடும் சசி தரூர் வேண்டுகோள் விடுத்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சசி தரூர் மற்றும் மல்லிகார்ஜூன் கார்கே ஆகியோர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் இரு தலைவர்களும் தீவிரமாக ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் சசி தரூர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

காங்கிரஸ்

அப்போது அவர் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக கட்சியில் தேர்தல் எதுவும் நடத்தப்படாததால் அமைப்பில் சில சில குறைபாடுகள் உள்ளன. கட்சி மாற்றத்துடன் செல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களா அல்லது எல்லாவற்றிலும் திருப்தியடைகிறீர்களா? எல்லாம் சரியாக உள்ளது என்று நீங்கள் நினைத்தால், 2014 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நம்முடன் இருக்காத வாக்காளர்களை மீண்டும் கட்சிக்கு கொண்டு வரும் மாற்றத்தை நான் விரும்புவதால் எனக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டாம். 

எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

நாங்கள் இரண்டு சக காங்கிரஸ்காரர்களாக தேர்தலில் போட்டியிடுகிறோம். கட்சிக்குள் மாற்றம் வேண்டுமானால் எனக்கு வாக்களிக்கலாம் என்று பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொள்கிறேன். 2014 மற்றும் 2019ல் நம்மை விட்டு பிரிந்த உறுப்பினர்களை மீண்டும் கொண்டு வர விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.