காங்கிரஸ் தலைவர் தேர்தல்... சசி தரூருக்கு நோ சொல்லும் கேரள காங்கிரஸ்..

 
சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட சசி தரூருக்கு அரஸ்ட் வாரண்ட்!

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருக்கும் சசி தரூருக்கு அவரது சொந்த மண்ணான கேரளாவில் ஆதரவு இல்லை. கேரள காங்கிரஸார் ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக்க விரும்புகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ராகுல் காந்தியை மீண்டும் கட்சியின் தலைவராக்க வேண்டும் என்று பல மாநில காங்கிரஸார் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர். ஆனால் ராகுல் காந்திக்கு மீண்டும் தலைவர் பதவியை ஏற்பத்தில் விருப்பம் இல்லாமல் இருப்பது போல் தெரிகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி சரூர் தலைவர் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக உள்ளதாக தகவல்.

வரணும்… காங்கிரஸ் தலைவரா மீண்டும் ராகுல் காந்தி வரணும்… அசோக் கெலாட் கோரிக்கை

இந்நிலையில், ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட்டும் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளார். தற்போதைய சூழ்நிலையில், அசோக் கெலாட்டுக்கு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் ஆதரவு நிலவுகிறது. அதேசமயம் சசி தரூருக்கு அவரது சொந்த மாநில கேரளாவில் கூட ஆதரவு இல்லை. கேரள காங்கிரஸார் சசி தரூருக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.

கே.சுரேஷ்
கேரளாவை சேர்ந்தவரும், மக்களவையின் காங்கிரஸின் தலைமை கொறடாவுமான கே.சுரேஷ் கூறுகையில், சசி தரூர் போட்டியிடக் கூடாது. அவர் ஒரு சர்வதேச மனிதர். ஒருமித்த வேட்பாளர் இருக்க வேண்டும்.  ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக ஆக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம் என தெரிவித்தார். மற்றொரு கேரள எம்.பி.யான பென்னி பெஹனன் கூறுகையில், சசி தரூர் போட்டியிடுவார் என்று நான் நினைக்கவில்லை, அவர் கட்சி மேலிடத்தின் முடிவை பின்பற்றுவார் என தெரிவித்தார்.