பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக வரமாட்டார், இந்த மகா விகாஸஅகாடி அரசு வலுவாக உள்ளது... சரத் பவார்

 
ஜெயிலுக்கு போனவங்க எல்லாம் என்னிடம் கேள்வி கேட்க கூடாது- அமித் ஷாவை தாக்கிய சரத் பவார்

தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக வரமாட்டார். இந்த மகா விகாஸஅகாடி அரசு வலுவாக உள்ளது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் உஸ்மானாபாத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களிடம் பேசுகையில், இக்கட்டான காலங்களில் அரசியல் செய்யக்கூடாது என்று சிலர் நினைக்கவில்லை. தேர்தலுக்கு முன் அவர் (தேவேந்திர பட்னாவிஸ்) தான் மீண்டும் முதல்வராக வருவேன் என்று கூறினார். அதை நாங்கள் தெளிவாக அனுமதிக்கவில்லை. இப்போது நாங்கள் அதை உறுதி செய்துள்ளோம். அவர் மீண்டும் முதல்வராக வரமாட்டார். இந்த மகா விகாஸஅகாடி அரசு வலுவாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். சரத் பவாரின் கருத்துக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.

தேவேந்திர பட்னாவிஸ்

பா.ஜ.க.வின் மூத்த தலைவர் கோபிசந்த் படல்கர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: சரத் பவார்ஜியின் பேச்சை நான் பார்த்தேன். அவர் உதவியற்றவராகவும், ஏமாற்றமாகவும் இருப்பதாக உணர்கிறேன். புனே மெட்ரோ தொடக்க விழாவுக்கு அவர் அழைக்கப்படாத காரணத்தால் பட்னாவிஸ் மீது அவர் இன்னும் கோபமாக இருக்க காரணம் மற்றும் இதனால் இது போன்ற அறிக்கைகளை வெளியிடுகிறார். பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ.க. 105 இடங்களை பெற்றது மற்றும் சிவ சேனா 56 இடங்களை பெற்றது.

தேசியவாத காங்கிரஸ்

சரத் பவார் ஒரு சக்தி வாய்ந்த அரசியல்வாதி, மகாராஷ்டிராவில் அந்த கட்சி தொடங்கியதில் இருந்து இன்னும் தேசியவாத காங்கிரஸ் சேர்ந்தவரை  முதல்வராக்க முடியவில்லை. தேவேந்திர பட்னாவிஸ் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த தலைவர்களுக்கு வாய்ப்பு அளித்தார். நான், ராம் சத்புதே மற்றும் சதாபாவ் கோட் போன்ற இளம் தலைவர்களை அவர் கொண்டு வந்த விதம் அவரது தலைமைத்துவ திறமையை காட்டுகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பிரதான அரசியலில் கொண்டு வர தைரியம் தேவை. அதனால்தான் நிறுவப்பட்ட தலைவர்கள் அவர் மீது பொறாமைப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.