2024 மக்களவை தேர்தலில் பொது குறைந்தபட்ச திட்டத்தின்கீழ் எதிர்க்கட்சிகள் போட்டியிடுவது பற்றி பரிசீலிக்கலாம்.. சரத் பவார்

 

2024 மக்களவை தேர்தலில் பொது குறைந்தபட்ச திட்டத்தின்கீழ் எதிர்க்கட்சிகள் போட்டியிடுவது பற்றி பரிசீலிக்கலாம் என்று தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத் பவார், 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக நாட்டில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைக்க அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக சரத் பவார் கூறுகையில், எதிர்க்கட்சிகள் கைகோர்த்து ஒரு பொதுவான குறைந்தபட்ச திட்டத்தை உருவாக்கலாம். பொது குறைந்தபட்ச திட்டத்தின்கீழ் எதிர்க்கட்சிகள் போட்டியிடுவது பற்றி பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தார்.

ராகுல் காந்திக்காக மன்மோகன் சிங் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார்….. காங்கிரஸ் தலைவர் தகவல்

மத்தியில் கடந்த 2004 முதல் 2014 வரை இரண்டு முறை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி-1 மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி-2 அரசாங்களின் பிரதமராக மன்மோகன் சிங்  இருந்தார். அந்த அரசாங்கம் பொதுவான குறைந்தபட்ச திட்டங்களில் அடிப்படையில் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க.

கடந்த திங்கட்கிழமையன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களிடம் பேசுகையில், பா.ஜ.க. சித்தாந்தத்திற்கு எதிரான ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளை ஒன்றிணைக்க தேசிய அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் எனது வயதின் காரணமாக எந்த முக்கிய பாத்திரத்தையும் ஏற்க விரும்பவில்லை. பா.ஜ.க.வுக்கு எதிரான பொதுக் கருத்தை உருவாக்க பா.ஜ.க அல்லாத கட்சிகளை ஒன்றிணைக்க மட்டுமே உதவுவேன் என்று தெரிவித்து இருந்தார்.