எனக்கு தலைவர் பதவி மேல் விருப்பம் இல்லை.. பா.ஜ.க.வுக்கு மாற்றாக முயற்சி மேற்கொள்ளப்பட்டால் ஆதரிப்பேன்.. சரத் பவார்

 
ஜெயிலுக்கு போனவங்க எல்லாம் என்னிடம் கேள்வி கேட்க கூடாது- அமித் ஷாவை தாக்கிய சரத் பவார்

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைமை பொறுப்பை ஏற்க மாட்டேன் ஆனால் பா.ஜ.க.வுக்கு மாற்றாக முயற்சி மேற்கொள்ளப்பட்டால் ஆதரிப்பேன் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் உள்பட பல தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அதேவேளையில், 2024 மக்களை தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்று  சில தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். 

பா.ஜ.க.

மேலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தலைமை தாங்க வேண்டும் சில தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சரத் பவார் தலைமை தாங்கலாம் என்று யூக செய்திகள் வெளியாகின. ஆனால் சரத் பவாரோ, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் பதவியை ஏற்க மாட்டேன் என்று தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ்

இது தொடர்பாக சரத் பவார் கூறியதாவது: சமீபத்தில் எங்கள் கட்சியின் (தேசியவாத காங்கிரஸ்) சில இளம் தொண்டர்கள் சிலர், நான் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர். ஆனால் எனக்கு அந்த பதவியில் ஆர்வம் இல்லை. நான் அதற்குள் வரப் போவதில்லை. நான் அந்த பொறுப்பை ஏற்க மாட்டேன். பா.ஜ.க.வுக்கு மாற்று வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டால் கூட்டணிக்கு ஒத்துழைக்கவும், ஆதரிக்கவும், வலுப்படுத்தவும் தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.