அரசுக்கு எதிராக பேசியதால் தான் சஞ்சய் ரவுத் சொத்துக்களை அமலாக்க இயக்குனரகம் முடக்கியதா?.. மோடியிடம் கேட்ட பவார்

 
ராமர் கோயில் போல் அயோத்தியில் மசூதி கட்டவும் அறக்கட்டளை அமைக்க வேண்டும்….. சரத் பவார்

மத்திய அரசுக்கு எதிராக பேசியதால் தான் சஞ்சய் ரவுத்துக்கு எதிராக அமலாக்க இயக்குனரகம் நடவடிக்கை எடுத்ததா? என்று பிரதமர் மோடியிடம் கேட்டதாக சரத் பவார் தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்  நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. பிரதமர் மோடியுடான சந்திப்பு குறித்து சரத் பவார் கூறியதாவது:  சிவ சேனாவின் சஞ்சய் ரவுத்தின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது தொடர்பான விஷயத்தை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்றேன்.

மோடி

ஒரு மத்திய நிறுவனம் இதுபோன்ற நடவடிக்கை எடுத்தால், அதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். மத்திய அரசுக்கு எதிராக அவர்  பேசியதால் தான அவருக்கு எதிரான இந்த நடவடிக்கை?. மகாராஷ்டிராவில் ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. யாரையும் புறக்கணிக்கவோ அல்லது ஒரங்கட்டவோ செய்யக்கூடாது என்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் பொறுப்பு.

சஞ்சய் ரவுத்

நாங்கள் ஒருவருக்கொருவர் உட்கார்ந்து பேசும்போது இதுபோன்ற எந்த விஷயமும் எழுவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். ரூ.1,034 கோடி பத்ரா சால் நில மோசடி வழக்கில் சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத், அவரது மனைவி மற்றும் அவரது உறவினர்களின் சொத்துக்களை அமலாக்க இயக்குனரகம் முடக்கியது. அமலாக்க இயக்குனரகத்தின் இந்த நடவடிக்கை மகாராஷ்டிராவின் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசாங்கத்தை கவிழ்க்க ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் விளைவு என்று சஞ்சய் ரவுத் குற்றம் சாட்டினார்.