‘கண்ட்ரோல்’விவகாரம் - பதில் சொல்லாமல் நழுவிய செந்தில்பாலாஜி

 
செ

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உடனான கண்ட்ரோல் விவகாரம் குறித்த சர்ச்சைக்கு பதில் அளிக்க நழுவிச்சென்றுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
 அரசு நிகழ்ச்சி என்பதாலும் அரசு அதிகாரிகள் உடன் இருப்பதாலும் அது குறித்து பேச வேண்டாம் என நினைக்கிறேன் என்று தவிர்த்து இருக்கிறார் செந்தில் பாலாஜி.

ஜ்

 கரூரில் அதிமுக தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடப்படுவதாக அதிமுக தரப்பு தொடர்ந்து குற்றம் சாட்டை வருகிறது.  சமீபத்தில் கடத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான அதிமுக ஐடி விங் நிர்வாகியை தாக்கும் வீடியோ ஒன்றும் வலைத்தளங்களில் பரவி வருகிறது.  அதிமுக கரூர் மாவட்ட செயலாளர் எம். ஆர் .விஜயபாஸ்கர்,  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது தொடர்பாக தமிழக டிஜிபியை சந்தித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்துள்ளார்கள் .

அது மட்டுமல்லாமல் ஜெயக்குமார்,  கரூர் மாவட்டத்தில் திமுக அராஜக போக்கை  கடைபிடித்து வருகிறது.   கரூரில் கண்ட்ரோல் இல்லை என்று செந்தில் பாலாஜிக்கு எதிராக தெரிவித்து இருந்தார். 

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தன்னை பற்றி செய்துள்ள விமர்சனத்திற்கு,   கரூர் மாவட்டத்தில் அனைத்து தேர்தல்களிலும் மக்களால் புறக்கணிக்கப்படும் அதிமுக எப்படியாவது செய்திகளில் இடம் பெற்று விட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.   கரூரில் கன்ட்ரோல் இல்லை என்று மெயின்ரோடு என்று எல்லோரால்லும் பேசப்படும் ஜெயக்குமார் பேசி இருக்கிறார்.   முதலமைச்சரின் நல்லாட்சியில் தமிழ்நாடு முழுக்க சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக கையாளப்பட்டு அமைதி பூங்காவாக திகழ்கிறது.   தனக்குத்தானே கண்ட்ரோல் இல்லாதவர்கள் சொல்வதை எல்லாம் மக்கள் நம்புவதில்லை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ன்ன்

 இந்நிலையில் கரூர் காமராஜர் மார்க்கெட் பகுதியில் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய விநாயகங்கள் கட்டும் பணியை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.   அப்போது செய்தியாளர்கள் அவர்களிடம்,   கண்ட்ரோல் விவகாரம் முறித்து கேள்வி  எழுப்ப,   அரசு நிகழ்ச்சி இது.  மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருப்பதால் அரசியல் குறித்து  இங்கே பேச வேண்டாம் என நினைக்கிறேன் என்று நழுவிச் சென்றிருக்கிறார்.