செந்தில் பாலாஜியின் டார்கெட் திமுகதான், அதை முடித்தே தீருவார் - பாஜக

 
s

நான் செந்தில் பாலாஜி அவர்களை மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். இப்போ மட்டுமல்ல, பல்வேறு நிகழ்ச்சிகளில் பாராட்டியிருக்கிறேன். டார்கெட் வைத்து செயல்படக்கூடியவர்.  ஏதோ ஓர் குறிக்கோளை வைத்த அந்த காரியத்தை செய்வார். அதை எப்படியும் முடித்தே தீருவார். நான் சொன்ன போது ஒருசிலருக்கு புரியாது இருந்திருக்கும். இப்போது அவர்களுக்கும் இன்றைக்கும் புரிந்திருக்கும் என நம்புகிறேன் என்று பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.   

செ

இதற்கு,  ‘’உண்மை தான் .  செந்தில் பாலாஜியின் டார்கெட் திமுகதான், அதை முடித்தே தீருவார். ஆனால் அதற்கு நீங்கள் ஏன்  வாழ்த்து சொல்கிறீர்கள்? பாராட்டு தெரிவிக்கிறீர்கள்? இன்னும் உங்களுக்கு புரியவில்லையே!’’என்கிறார் தமிழக பாஜக தலைவர் நாராயணன் திருப்பதி.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மின் பகிர்மான கழகம் சார்பில் தமிழக விவசாயிகளுக்கு 50,000 கூடுதல் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

ச்ச்

 அந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,  விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகளை கொடுத்திருக்கிறோம்.  அத்துடன் சேர்த்து இன்று 50,000 இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன.  ஒரு லட்சத்து 50 ஆயிரம் இணைப்புகளை 15 மாத காலத்தில் வழங்கி இருக்கிறோம்.  இதனை விட மகத்தான சாதனை இருக்க முடியாது. இதற்கு முன்னால் எந்த அரசும் இத்தகைய சாதனையை செய்தது இல்லை.  நம் அரசு தான் செய்து காட்டி இருக்கிறது.

 இதற்கு முன் இந்தியாவில் வேறு எந்த மாநில அரசர்களும் இத்தகைய சாதனையை செய்தது இல்லை.   இந்த சாதனையை தலை நிமிர்ந்து சொல்ல வைக்க காரணமாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை மனமாற நான் பாராட்டுகிறேன்.  அவரை முன்பு நடந்த நிகழ்ச்சிகளில் பாராட்டும் போது டார்கெட் வைத்து செயல்படுபவர் என்று குறிப்பிட்டேன்.   தனக்கு ஒரு டார்கெட் வைத்துக் கொள்வார்.  அந்த டார்கெட்டை எப்படியும் முடித்து காட்டுவார் செந்தில் பாலாஜி என்று நான் சொன்னேன்.

 நான் சொன்னது அன்று கூட சிலருக்கு புரியாமல் இருந்திருக்கலாம்.  அவர்களுக்கு இன்று புரிந்து இருக்கும்.  ஒரு இலக்கை தனக்கு தானே வைத்துக் கொண்டு அந்த இலக்கை முடித்துக் காட்டுபவராக செந்தில் பாலாஜி தன்னை நிரூபித்து காட்டியிருக்கிறார் என்று பாராட்டினார்.  இந்த பாராட்டைத் தான் நாராயணன் திருப்பதி மேற்கண்டவாறு விமர்சித்துள்ளார்.