செந்தில் பாலாஜி டுவிட்டர் கணக்கு முடக்கம்

 
se

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் டுவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது.

 தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் முடக்கப்பட்டிருக்கிறது.   செந்தில் பாலாஜியின் டுவிட்டர் கணக்கினை 2 லட்சத்திற்கு அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். 

 பரபரப்பான அரசியல் கருத்துக்கள், வாதங்கள்,  சவால்கள் போன்றவற்றை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் செந்தில் பாலாஜி.  இதனால் அவரின் டுவிட்டர் கணக்கு எப்போதும் பரபரப்பாகவே இருக்கும்.

se

 இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் அவரது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்து ‘வேரியோரியஸ்’ என பெயர் மாற்றம் செய்துள்ளனர்.  அதில் கிரிப்டோ கரன்சி தொடர்பான பதிவுகளை பதிவிட்டுள்ளனர்.   கொரோனாவுடன் போராடும் மக்களுக்கு உதவ நிதி திரட்ட போவதாகவும்,  அதற்கு பிரிட்டோ கரன்சி மூலம் நிதி அளிக்க வேண்டும் என்றும் பர்ம நபர்கள் பதிவிட்டுள்ளனர்.

s

’’அனைவருக்கும் வணக்கம், எங்கள் கட்சி அதன் சொந்த கிரிப்டோ வாலட்டை உருவாக்கியுள்ளது. இன்று, முன்னெப்போதையும் விட, ஆற்றல் வளர்ச்சியில் உங்கள் உதவி எங்களுக்குத் தேவை. கோவிட் 19 உடன் போராடும் மக்களுக்கு உதவ $1 மில்லியன் திரட்ட விரும்புகிறோம்!எனவே நாங்கள் கிரிப்டோ பணப்பைகளை உருவாக்கினோம். அனைத்து பணமும் ஹெல்பிண்டியா நிறுவனத்திற்கு அனுப்பப்படும்.
1GarMKJ2rc737nxN2w33XrsAHwvkBWHqwt
0xdFF0fF38a88578a0C30c05579717162458e90319
உதவிக்கான கிரிப்டோ முகவரிகள்.’’என்று பதிவிட்டுள்ளனர்.