ஆந்திர அரசியலில் பரபரப்பு- சந்திரபாபு நாயுடு உடன் பவன் கல்யாண் சந்திப்பு

 
pw

சந்திரபாபு நாயுடுவை பவன் கல்யாண் திடீரென்று சந்தித்து பேசி உள்ளதால் ஆந்திர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.  கூட்டணி மாற்றம் ஏற்படுமா என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.

 ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது . தேர்தலில் கூட்டணி மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது.

 ஜனசேனா கட்சியின் தலைவர் நடிகருமான பவன் கல்யாண் எதிர்க்கட்சிகள் வாக்கு 2024 தேர்தலில் பிளவுப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முன்னரே கூறியிருந்தார்.   ஆளும் ஒய். எஸ். ஆர் காங்கிரசுக்கு எதிராக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் ஜனசேனா கட்சி கூட்டணி சேருமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.  பாஜக கூட்டணியில் இருக்கிறது ஜனசேனா.

s

தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா மூன்று கட்சிகளின் கூட்டணிக்கு தெலுங்கு தேசம் கட்சி தான் தலைமை வகித்தது.  2018 ஆம் ஆண்டு தேர்தலில் இரு கட்சிகளுடன் ஆன கூட்டணியை முடித்துக் கொண்டு தெலுங்கு தேசம் கட்சி தனித்துப் போட்டியிட்டது.   

இந்த நிலையில் ஹைதராபாத்தில் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் அமைந்திருக்கும் சந்திரபாபு நாயுடுவின் இல்லத்திற்கு பவன் கல்யாண் சென்று இருக்கிறார்.   இரண்டு மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்திருக்கிறது.  

 இந்த சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளனர்.    ஆந்திர மாநிலத்தில் தற்போது சூழ்நிலை நெருக்கடி நிலை  மோசமாக இருக்கிறது.  ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக எல்லா எதிர்கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம்.  இந்த விவகாரத்தை நாங்கள் மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம் . மத்திய அரசு தலையிடுவதற்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்று  தெரிவித்தனர்.

 இதனால் தெலுங்கு தேசம் கட்சியும் ஜனசேனா கட்சியும் கூட்டணி சேருவதற்கான சாத்தியம் இருக்கிறதா என்ற கேள்விக்கு,   முன்பு பல கட்சிகளின் சேர்க்கை இருந்திருக்கிறது.   கடந்த காலத்தில் நாங்கள் தெலுங்கானா ராஷ்டிர சமிதியுடன் கூட்டணி வைத்திருந்தோம்.    கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விட்டன. ஜனநாயகமும் அரசியல் கட்சிகளும் இயல்பாக செயல்படுவதற்கு அனுமதிக்கப்படும்போது கூட்டணி பற்றி விவாதிக்கப்படும் என்று கூறி இருக்கிறார் சந்திரபாபு நாயுடு.

 மாநிலத்தின் எதிர்காலத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக விவாதித்தோம்.   மாநிலத்தில் பொறுப்புணர்வோடு பொறுப்பான நிர்வாகத்தை கொண்டு வருவது தான் எங்களின் முதன்மையான நோக்கம் .  இந்த பிரச்சனை குறித்து நான் எங்கள் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு எடுத்துச் சொல்வேன் என்று கூறியிருக்கிறார் பவன் கல்யாண்.