அதிமுகவில் 98.5% பேர் ஈபிஎஸ் அணியில் உள்ளனர்- செங்கோட்டையன்

 
sengottaiyan

அதிமுகவில் 98.5 சதவீதம் பேர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உள்ள அணியில் இருப்பதாகவும், ஒன்றரை சதவீதம் பேர் மட்டுமே ஓ.பி.எஸ். அணியில் இருப்பதாக கோபியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

Education Minister Sengottaiyan says No Objections Wearing Wristbands in  Tamil Nadu Schools

கோபியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது வலிமையை கூட்டுவதாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் 98.5 சதவீதம் பேர் இருக்கின்றனர். ஒன்றரை சதவீதம் பேர் மட்டுமே ஓ.பி.எஸ் அணியில் இருக்கின்றனர்” என தெரிவித்தார்.