மைத்ரேயனால் கட்சிக்கு எவ்வித பலனும் இல்லை; போனால் போகட்டும்- செல்லூர் ராஜூ

 
 sellur raju

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 


ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் செல்லூர் ராஜூ, “மைத்ரேயன் இதுவரை அதிமுகவிற்காக எந்த ஒரு செயலையும் செய்தது இல்லை. அவரால்  எந்த பலனும் இல்லை பாதிப்பும் இல்லை. இதனை பொருட்படுத்த வேண்டாம். முதலமைச்சர் ஸ்டாலின் மனம் வெதும்பி பேசியுள்ளார். தனது நிர்வாக திறன் குறைபாட்டை கூறுகிறாரா?,கட்சியின் நிர்வாகிகளை குறிப்பிடுகிறாரா?.என தெரியாத அளவிற்கு பயத்துடன் பேசியுள்ளார். மக்களுக்காக நலத்திட்டங்களை கொடுத்த கட்சி அதிமுக. தனது குடும்ப உறுப்பினர்களை கட்சிக்குள் கொண்டுவருவது மட்டும் தான் திமுக-வின் கொள்கை.  ஆனால் திமுகவை எதிர்ப்பது மட்டுமே அதிமுகவின் கொள்கை. திமுக மக்களுக்காக கொடுத்த அனைத்து திட்டங்களுமே குறுகிய கால நலத்திட்டங்கள்.


திமுக வலுவாக இருப்பதை பார்த்து பயம் கொண்டதால் அதிமுக உடைந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். அதிமுகவுக்கு எவ்வித கொள்கையும் இல்லை. பல்வேறு நலத்திட்டங்களை கொடுத்துள்ளதால் எந்த கொள்கையும் இல்லாத அதிமுகவை மக்கள் 3 ஆண்டுகள் ஆட்சியில் வைத்திருந்தனர்” எனக் கூறினார்.