அதிமுகவில் சசிகலா இணைப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுப்பார்- அமைச்சர் செல்லூர் ராஜு

 
sellur raju

அதிமுகவுடன் சசிகலா ஒன்றிணைவது குறித்து இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுப்பார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

Sellur Raju calls BJP crowds "flock of crows", rift widens

 மதுரை மாவட்டம் பரவையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் மகன் ஆர்.கே. தமிழ்மணி பெயரில் உள்ள டிரஸ்ட் மூலமாக இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கி  வைத்தார்.


நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜுவிடம், அதிமுக மீண்டும் வலுப்பெறும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும் காலம் நெருங்கிவிட்டதாக சசிகலா கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு  சசிகலாவின் இந்த கூற்றை அதிமுகவினுடைய இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உன்னிப்பாக கவனித்து வருகிறார். அதிமுகவின் நலன் கருதி, அவர் உரிய நேரத்தில் ஒரு முடிவு எடுப்பார் என தெரிவித்தார். மேலும் பெண்களுக்கான இலவச பேருந்து என்பதை தவிர்த்து கட்டணமில்லா பேருந்து திட்டம் என பெயரை மாற்ற வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.