"இதான் நல்ல சான்ஸ் மக்களே.. இப்போ விட்டா அல்வா தான்" - எச்சரிக்கும் செல்லூர் ராஜூ!

 
செல்லூர் ராஜூ

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரக் களம் விறுவிறுப்படைந்துள்ளது. வேட்புமனு தாக்கல், பரிசீலனை, வாபஸ் என அனைத்துப் பணிகளையும் முடித்துவிட்டு ஜரூராக களத்தில் இறங்கியுள்ளனர் வேட்பாளர்கள். அவர்களுக்கு ஆதரவாக கட்சியின் பெரிய தலைகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் மதுரை மாநகரில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். 

பெற்ற தாயும் இல்லை, வளர்த்த தாயும் இல்லை” - பிரசாரத்தில் உருகும் செல்லூர்  ராஜூ| Sellur raju election campaign in madurai

இன்று மதுரை 43ஆவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் கண்ணன் என்பவர் மதுரை வைகை வடகரை பகுதியில் அமைத்துள்ள தேர்தல் பணிமனையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்தார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர்,  "இந்த தேர்தல் தெருவிளக்கு, சாக்கடை, தண்ணீர் பிரச்னையை சரி செய்வதற்காக நடக்கிறது. அதிமுக வேட்பாளர் முருகனை வெற்றி பெற வைத்தால் வார்டில் எந்த பிரச்னையாக இருந்தாலும் அவர் வீட்டுக்கே போய் கேட்கலாம். 

image

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை 9 மாதம் ஆன நிலையில் எதுவுமே நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் 5,000 கொடுக்க சொல்லிவிட்டு இவர் எதுவுமே கொடுக்கவில்லை. பொங்கல் தொகுப்பாவது நன்றாக இருந்ததா அதுவும் சரியில்லை. 43ஆவது வார்டில் கட்சிக்காரர் ஒருவரை நிறுத்தாமல் 10 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள வார்டில் இருந்து ஒருவரை நிறுத்தியுள்ளனர் திமுகவினர். இது ஒரு குப்பை தேர்தல். இதற்கு கூட வேட்பாளரை இறக்குமதி செய்துள்ளனர். முதல்வர் மக்களை ஏமாற்ற நினைக்கிறார். இந்த ஆட்சியை அப்புறப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்தேர்தலில் மக்கள் பாடம் கற்பிக்காவிட்டால் அல்வா கிண்டி விடுவார்கள்” என்றார்.