20 நாட்களில் 20 கொலை,9 லாக் அப் மரணங்கள், லட்சகணக்கான கஞ்சா பறிமுதல்! இதுவே திராவிட மாடல்- சீமான்

 
stalin seeman

20 நாட்களில் 20 கொலை நடந்தது தான் திராவிட மாடல் ஆட்சி எனவும், லட்சக்கணக்கான கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதும், திமுக பொறுப்பேற்ற ஓராண்டில் 9 லாக் அப் மரணங்கள் நடந்துள்ளது தான் திராவிட மாடல் ஆட்சி எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

Seeman comes in support of Vijay - Seeman- Vijay- Rollsroyce-  RealHeroJosephVijay- Beast | Thandoratimes.com |

சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரை முருகனை சந்தித்து நலம் விசாரித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “சாட்டை துரைமுருகன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது பழிவாங்கும் நடவடிக்கை. மாட்டுக்கறி ஏற்றுமதியில் முதலிடம் இருப்பதாக கூறிக்கொள்ளும் மத்திய அரசு இஸ்லாமிய நாடுகளுக்கு தான் ஏற்றுமதி செய்கிறது. அனைத்து நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டிருக்கும் இவர்கள் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஏன் பேச வேண்டும்? அங்கு பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு யார் பொறுப்பு? உலக நாடுகள் நம்மை கைவிட்டு தனிமைப்படுத்தப்படும், பொருளாதார சிக்கல் ஏற்படும், இலங்கை போன்ற நிலை உருவாகும்.

ஆன்லைன் சூதாட்டம் குறித்து முதல்வர் தடை விதிப்பதாக கூறியிருந்த நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. சென்னையில் நேற்று ஒரு பெண் உயிர் இழந்தும் கூட அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் புகழ்பெற்ற நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர் பொருள் இழப்பும் உயிரிழப்பும் ஏற்படுவதை எப்படி விளையாட்டு என்று எடுத்துக் கொள்வது, கொலை செய்வதும் ஒரு விளையாட்டா, அரசு தலையிட்டு சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களின் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் செய்து உறுதிப்படுத்த வேண்டும். 20 நாட்களில் 20 கொலைகள் என ஓராண்டு பொறுப்பேற்றதில் இருந்து 9 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளதாகவும், ஆனால் அரசு தரப்பில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதாக கூறி கொள்கிறார்கள். 

திராவிடம் என்பது சமஸ்கிருதம். மாடல் என்பது ஆங்கிலம். 20 நாளில் 20 கொலை என்பது திராவிட மாடல் லட்சக்கணக்கான கிலோ கஞ்சா பிடிபட்டிருப்பது திராவிட மாடல்” எனக் கூறினார்.