நாட்டையே அம்பானி, அதானிக்கு பாஜக விற்று வருவருகிறது - சீமான்

 
seeman

5ஜி அலைக்கற்றை மட்டுமில்லாமல் நாட்டையே அம்பானி, அதானிக்கு பாஜக விற்று வருவதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். 

Sedition case against Seeman - The Hindu

இந்திய சுதந்திர போராட்ட வீரரான தீரன் சின்னமலையின் 217- வது நினைவு நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து, புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பெரிய மக்கள் படையை உருவாக்கி வெள்ளையர்களை எதிர்த்தவர் தீரன் சின்னமலை. இன்றைய நாளில் உறுதி ஏற்று அதை செயல்படுத்துவது தான் அவருக்கு தரும் உண்மையான மரியாதை. சீமானுக்கு வாய்க்கொழுப்பு அதிகம் என ஜெயகுமார் விமர்சித்து தொடர்பாக, எனக்கு வாய்க்கொழுப்பு, ஜெயக்குமாருக்கு பணகொழப்பு. அண்ணன் ஜெயக்குமார் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. அதை கெடுத்துக் கொள்ளக் கூடாது. 

ஸ்டாலினை பேசினாலும், பாஜக வை பேசினாலும் காலையில் வீட்டுக்கு சோதனைக்கு வந்துவிடுவார்கள். அந்த பயம் தான், ஆனால், என்னிடம் இழப்பதற்கு எதுவும் கிடையாது உயிரைத் தவிர. அதிமுக, திமுக, பிஜேபி என யாருக்கும் தனித்து போட்டியிட திராணி இல்லை. ஆனால் எங்களுக்கு உள்ளது. நல்ல ஆட்சி கொடுக்க வேண்டும் என்றால் மக்களை நம்ப வேண்டும். நீங்கள் மக்களை நம்பவில்லை. உறுதியான கோட்பாடு இருந்தால் அதை வைத்து மக்களிடம் வாக்கு கேளுங்கள். ஆனால் அது உங்களிடம் இல்லை கோடிகள் தான் உள்ளது. 

5ஜி அலைக்கற்றை மட்டுமில்லாமல் நாட்டையே அதானி அம்பானிக்கு விற்பனை செய்து விடுகின்றனர். மோடி டீ விற்றார் என்று சொல்வதை நம்பும் மக்கள், மோடி நாட்டை விற்கிறார் என்று சொல்வதை நம்புவதில்லை. 5 மாநில தேர்தல் வரவில்லை என்றால் பெட்ரோல் விலையை குறைத்து இருக்க மாட்டார்கள். அனைத்திற்கும் விலை உயர்த்தி உள்ளனர். ஜிஎஸ்டியை ஒவ்வொரு மாதமும் மாநிலங்களுக்கு திருப்பி கொடுக்கிறோம் என்று சொல்கிறீர்கள். எதற்கு இங்கிருந்து வாங்குகிறீர்கள். அப்புறம் எதற்கு நீங்கள் திரும்ப கொடுக்கிறீர்கள்? மத்திய அரசுக்கு என்று தனியாக நிதி உள்ளதா? மாநிலங்களின் வரி வருவாயை வாங்கித் தான் மத்திய அரசு நிதி பெறுகிறது” என விமர்சித்தார்.