அம்பானி, அதானியை உலக கோடீஸ்வரர்களாக மாற்றியது தான் மோடி அரசின் சாதனை - சீமான்

 
seeman

திண்டுக்கல்லில் இன்று 26.06.22 நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். 

Not DMK, not ADMK, Naam Tamilar Katchi: Seeman as 'Thackeray of Tamil Nadu'  | Elections News,The Indian Express

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “அதிமுக பிரச்சினையைப் பொருத்த அளவில் அது அவர்களின் உட்கட்சிப் பிரச்சனை. அதில் கருத்து கூற முடியாது. அது பெரியவர்கள் பிரச்சினை. அது அவர்களால் தான் பேசி தீர்வு காண வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அகதிகளுக்கு தமிழக அரசால் தற்போது வீடுகள் கட்டி வருகிறார்கள்  வீடுகள் கட்டி தருவதில் மிகப்பெரிய முறைகேடு குறைபாடு மிகப்பெரிய இலங்கை தமிழர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் முதலில் சிறப்பு முகாம்களை மூடவேண்டும். கியூ பிராஞ்ச் அமைப்பை தடை செய்ய வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்று தரவேண்டும். தமிழகம் முழுவதும் கட்டிடங்கள் கட்டுவதில் தமிழக அரசு தரமான கட்டிடங்களை கட்ட வேண்டும் தரமற்ற முறையில் கட்டிடம் கட்டுவது பிரயோஜனம் கிடையாது.


பல இளைஞர்கள் திறமை படைத்தவர்களாக உள்ளனர். அவர்களது திறமை வெளியில் தெரியாமல் உள்ளது. மற்ற நாடுகளில் அரசு வேலைதான் தரமானதாக இருக்கும். ஆனால் இங்கு அரசு வேலைதான் தரமற்றதாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் யானைகள் நடமாட்டத்தை பொருத்தவரை யானைகள் அதன் போக்கில் விடவேண்டும். யானைகள் இருக்கும் இடங்களை நாம் ஆக்கிரமிப்பு செய்தால் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வரத்தான் செய்யும். மேலும் யானைகள் வழித்தடங்களை மறித்து ரிசார்ட் காட்டேஜ் தங்கும் விடுதிகள் கட்டுவதால்  தடம் மாறி யானைகள் வேறு இடத்திற்கு வருகிறது. அவ்வையார் படத்தில் ஆயிரம் யானைகளை ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் நிறுத்தி காட்சிகளை அமைத்தார்கள் நம் முன்னோரான ராஜராஜ சோழன் தனது படையில் 60,000 யாணைகளை வைத்திருந்தார். ஆனால் தற்போது ஆயிரம் யானைகள் மட்டுமே இருப்பதாக கணக்கு சொல்லப்படுகிறது. அனைத்தும் இறந்து விட்டது இதற்கு. தனிக்கவனம் செலுத்த வேண்டும். மத்திய மோடி அரசாங்கத்தை பொருத்தவரை 8 ஆண்டுகளில் எதை சாதித்தார் என்பதை அவர் சொல்ல வேண்டும். அதானியையும் அம்பானியையும் உலக பணக்காரர்களாக மாற்றியதை தவிர அவர் வேறு எந்த ஒரு நல்லதையும் செய்யவில்லை” என தெரிவித்தார்.