பாஜகாவால் நாம் தமிழர் கட்சியை விட ஒரு ஓட்டு கூடுதலாக வாங்க முடியுமா?- சீமான்

 
seeman

பாராளுமன்ற தேர்தலில், பாஜக தனித்து போட்டியிட்டு, நாம் தமிழர் கட்சியைவிட ஒரு ஓட்டு கூடுதலாக வாங்க முடியுமா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 

Sedition case against Seeman - The Hindu

சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “எப்பவும் நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம். ஒரு மாற்று அரசியல் நோக்கி பயணிக்கிறோம். மற்றவர்கள் செய்த தவறை நாங்கள் செய்ய தயாராக இல்லை. தனித்தே போட்டியிடுவோம். வெற்றி, தோல்விகள் பற்றி கவலை இல்லை.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை கடத்துவது மிரட்டுவதும் ஏன்?

தமிழக தேர்தல் ஆணையத்தால் 3வது பெரிய கட்சியாக அறிவிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியினை அனைத்து கட்சிகள் கூட்டத்தில் கூட கண்டுகொள்வதில்லை. தேர்தல் ஆணையம் ஒரு நாடக கம்பெனி. பாராளுமன்ற தேர்தலில், பாஜக தனித்து போட்டியிட்டு, நாம் தமிழர் கட்சியைவிட 1 ஒட்டு கூடுதல் வாங்க முடியுமா? அதிகம் லாபம் ஈட்டும் தொழிலாக அரசியல் மாறிவிட்டது. MP, MLA ஐ விட வார்டு கவுன்சிலர் அதிகம் லாபம் ஈட்டுகின்றனர். சேர்மன், மேயர் தேர்வு மறைமுகமாக நடப்பது பணநாயகத்திற்கு வழிவகுக்கும். 

மக்கள் ஆட்சியின் தத்துவத்தை ஏற்றுகொண்ட நம் நாட்டில் மக்களாட்சியின் தலைவனை தேர்வு செய்ய முடியாவிட்டால் அது ஜனநாயகமா? மக்களால் தேர்வு செய்யபடாதவாதவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க கூடாது. பாஜக- அதிமுக தனித்து போட்டி என்பது பாராளுமன்றத்தில் தொடருமா? மாற்றம் வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருபெரும் கட்சிகளோடு கூட்டணி வைத்தால் ஏமாற்றம்தான் ஏற்படும். காங்கிரசும், பாஜகவும் கட்சிகள் தான் வேறு. இருவருக்கும் கொள்கையில் வேறுபாடு கிடையாது” எனக் கூறினார்.