"நாங்க தான் இளிச்சவாயா? ஸ்டாலினுக்கு இத செய்ய தில் இருக்கா?" - சீறிய சீமான்!

 
சீமான்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அதன் இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. ஏனென்றால் இன்றோடு அனைத்து வகை பிரச்சாரங்களும் முடிவடைகிறது. நாளை மறுநாள் தேர்தல் நாள். இதனால் தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். பரப்புரை இன்றோடு நிறைவுபெறும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், "அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தேர்தலில் போட்டியிடுகின்ற 60-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனியாக போட்டியிடும் நிலையில், `நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் பாஜக வந்துவிடும்’ என திமுக-வினர் பிரசாரம் செய்துவருகின்றனர். இதுபோன்ற கருத்துகள், எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. கூட்டமாக கொள்ளையடித்தாலும் கொலை செய்தாலும் சரியென்ற நிலை நிலவுகிறது. இவற்றையெல்லாம் யார்தான் தட்டிக்கேட்பது? பணம் உள்ளவர்கள் தான் அரசியல் செய்ய வேண்டுமென்றால் இந்தியாவை ஜனநாயக நாடு என்று சொல்லக்கூடாது. மாறாக, பணநாயகம் நாடு என்றுதான் சொல்ல வேண்டும்.  

தீவிர பிரச்சாரம் செய்து வரும் சீமான்..! (படங்கள்) | nakkheeran

திராவிட கட்சிகளை தாண்டி பிற கட்சிகளை ஆதரிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். ஆனால் அதற்காக திமுக, அதிமுக கட்சிகளுக்கே மாற்றி மாற்றி வாக்களித்தால் நாட்டில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காது. இரண்டு கட்சிகளும் மாறி மாறி என்ன சாதித்திருக்கிறார்கள்? இதை மக்கள் யோசிக்க வேண்டும். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை பொய் வழக்கில் கைது செய்கின்றனர் திமுகவினர். உண்மையில் மனதில் தில் இருப்பவர்கள் திமுகவில் இருக்கிறார்கள் என்றால், பிஜேபியின் வேட்பாளர்கள் ஒருவர்மீது அப்படி செய்து பார்க்கட்டுமே. நாம் தமிழர் கட்சி கட்டாயமாக தனது பதிலடியை திருப்பிக் கொடுக்கும். 

image

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து நிற்க பயந்து கூட்டணி கட்சிகளுக்கு திமுக இடத்தை ஒதுக்கிக் கொடுத்துள்ளது. சொல்லப்போனால் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்றதற்கு காரணம் மோடி தான். அந்தவகையில் நியாயமாக பார்த்தால் துர்கா ஸ்டாலின் பிரதமர் மோடி படத்தை வைத்து தான் சாமி கும்பிட வேண்டும். 2024, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம், மக்கள் வாக்களிக்காவிடில் நாங்கள் ஏமாறப்போவதில்லை. மாறாக, மக்கள் தான் மற்றவர்களுக்கு வாக்களித்து தங்களை ஏமாற்றிக் கொள்கிறார்கள்” என்றார்.