அண்ணாமலைக்கு எதிராக டெல்லியில் நடந்த ரகசிய ஆலோசனை

 
a

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் டெல்லியில் ரகசிய ஆலோசனை நடத்தி இருக்கின்றனர்.  

தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை வந்தது முதல் பாஜக என்றால் தமிழகத்தில் அவர் மட்டும் தான் தெரிகிறார்.  இதனால் மற்ற நிர்வாகிகள் வெளியே தெரியாமல் இருக்கிறார்கள்.  இப்படியே சென்றால் காணாமல் போய்விடுவோம்.   தேர்தலில் சீட்’டுக்கு கூட அண்ணாமலையிடம் கையேந்தி நிற்கவேண்டிய நிலை வந்து விடும் என்று ஆடிப் போயிருக்கிறார்கள். 

க்

 அந்த நிர்வாகிகள் இதை பக்கத்து மாநிலத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் பாஜக நிர்வாகியிடம் சொல்ல,  அவரும் அது தான் சரி என்று சொல்லி இருக்கிறார்.  இதை இதை அடுத்து பக்கத்து மாநிலத்தில் முக்கிய அரசு பதவியில் இருக்கும் ஒருவரும் தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகிகள் சிலரும் டெல்லிக்கு சென்று இது குறித்து ரகசிய ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். 

 பக்கத்து மாநிலத்தின் பாஜக ராஜ்யசபா எம்பி ஒருவரின் டெல்லி வீட்டில் தான் இந்த ரகசிய ஆலோசனை கூட்டம் நடந்திருக்கிறது.   கடந்த மாதம் 22 ஆம் தேதி இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்கிறது.   நீண்ட நேரம் இந்த ஆலோசனை நீடித்திருக்கிறது.   நாம எல்லோரும் ஒற்றுமையாக இருந்து அண்ணாமலை நம்மை திரும்பி பார்க்க வைக்க வேண்டும்.   இல்லையென்றால் அப்படியே நாம் ஒற்றுமை இல்லாமல் தனித்தனியாக இருந்தால் அண்ணாமலை நம்மளை சாப்பிட்டு விடுவார், தேர்தலில் சீட்’டுக்கு கூட அவரிடம் நாம் கையேந்தி நிற்க வேண்டிய நிலை வந்துவிடும் என்று ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.

  காங்கிரஸ் கட்சியில் தான் மாநில தலைமைக்கு எதிராக கோஷ்டி அரசியல் பண்ணும் கலாச்சாரம் இருந்து வருகிறது.  இப்போது அது பாஜகவிலும் ஆரம்பமாகிவிட்டது என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது தமிழக அரசியலில்.