இதெல்லாம் கொழுப்பு; தேவையில்லாத சேட்டை! -முதல்வர் ஸ்டாலின் மீது சீமான் ஆவேச பாய்ச்சல்

 
se

ஸ்டாலின் முதல்வர் ஆனதும் அவர் அப்பாவுக்கு கடலுக்குள்ள பேனா நினைவுச்சின்னம் வைக்கிறார்.  உதயநிதி முதலமைச்சர் ஆனால் அவர் அப்பாவுக்கு விக்கு நினைவுச்சின்னம் வைப்பாரா? இதெல்லாம் தேவையில்லாத சேட்டை. கொழுப்புதான்.  நான் விடமாட்டேன் என்று ஆவேச பாய்ச்சல் காட்டினார் சீமான்.

சத்ரபதி சிவாஜிக்கு அரபிக் கடலில் மகாராஷ்டிரா அரசு நினைவுச் சின்னம் எழுப்பி வருவதைப்போல் வங்க கடலில் கருணாநிதியின் எழுத்தாற்றலை சொல்லும் அளவிற்கு மெரினா நடுக்கடலில் பேனா நினைவுச்சின்னம் அமையவிருக்கிறது.

p

கருணாநிதி முதல்வராக இருந்தபோது கன்னியாகுமரியில் நடுக்கடலில் 133 அடியில் திருவள்ளுவர் சிலை அமைத்தார்.  அவரின் மறைவுக்கு பின்னர் தற்போது திமுக ஆட்சியில் அரசின் சார்பில் சென்னை மெரினா நடுக்கடலில்  134 அடியில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.    நடுக்கடலில்  80 கோடி ரூபாய் செலவில் இந்த நினைவுச்சின்னம் அமையவிருக்கிறது. 

 இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ’’அதை நிறுவ முடியாது.  அது நடக்கப் போவதுமில்லை . நான் நடக்க விடப் போவதுமில்லை.   இப்ப பேனா வைக்கிறீங்க.. அதுக்கு கீழே ஒரு நோட்டு வைப்பீங்க. அப்புறம் கண்ணாடி வைப்பீங்க.  அவர் கண்ணாடி போட்டிருந்தார்னு  கண்ணாடி வைப்பீங்க .  அடுத்து உதயநிதி முதலமைச்சர் ஆனால்,  என் அப்பா  விக்கு வச்சிருந்தார்னு சொல்லி  கடலுக்குள்ள விக் நினைவுச்சின்னம் வைப்பாரா?இதெல்லாம் தேவையில்லாத சேட்டை. கொழுப்புதான்.  நீங்களே சொல்லுங்க... இதெல்லாம் யாருடைய காசு..? ஊடகங்கள்தான் இதை தண்டிக்கணும்’’ என்று ஆவேச பாய்ச்சல் காட்டினார் சீமான்.