எனக்கு வாய்க்கொழுப்பு அவருக்கு பணக்கொழுப்பு - சீமான் பாய்ச்சல்

 
சே

எனக்கு வாய்க்கொழுப்பு என்றால், அவருக்கு பணக்கொழுப்பு  என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்  சீமான். 

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்படுகிறது.  நினைவிடத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படுகிறது.   அதேபோல் மெரினா கடல் நடுவில் 80 கோடி ரூபாய் செலவில் பேனா சிலை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதாவது கன்னியாகுமரி கடலுக்கு நடுவே திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு இருப்பது போல் மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவைப் போற்றும் விதமாக பேனா நினைவுச் சின்னம் எழுப்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன .  

பல்வேறு கட்சிகளும் இதை கண்டித்து வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து இதற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார். இன்றைக்கு ஸ்டாலின் தனது அப்பா நினைவாக தொப்பி சிலையை வைக்கிறார் . அடுத்து உதயநிதி முதல்வரானால்  என் அப்பா விக்கு வைத்திருந்தார் என்று சொல்லி கடலுக்கு நடுவே விக்கு சிலை வைப்பாரா என்று கேட்டிருந்தார்.   அதன் பின்னர் அவர் இந்த விவகாரத்தில் அதிமுகவையும் இழுத்துக் கொண்டார். 

ஜ்

 கருணாநிதிக்கு பேனா சிலை வைத்தால்,  அப்புறம் எம்ஜிஆர் நினைவாக தொப்பி சிலையும்,  ஜெயலலிதா நினைவாக மேக்கப் செட் சிலையும் வையுங்கள் என்று விமர்சித்து இருந்தார். 

 சீமானின் இந்த விமர்சனம் அதிமுகவினரை கொதிப்படைய வைத்திருக்கிறது.  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சீமானை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.  சீமான் அதிமுகவுடன் விளையாட வேண்டாம்.   அதிமுக தலைவர்களை சீண்டினால் பின் விளைவுகள் கடுமையாக இருக்கும்.    சீமான் வாய்க்கொழுப்பை அதிமுகவுடன் காட்ட வேண்டாம் திமுகவிடம் வேண்டுமானால் காட்டிக் கொள்ளட்டும் .  அதிமுகவுடன் காட்டினால் நடப்பதே வேற என்று எச்சரித்து இருந்தார் .

ஜெயக்குமாரின் இந்த எச்சரிக்கைக்கு சீமான் பதில் அளித்து இருக்கிறார்.  எனக்கு வாய்ப்பு கொழுப்பு என்றால் அவருக்கு பணக்கொழுப்பு . இதில் எந்த கொழுப்பு இப்போது தேவைப்படுகிறது.  நீங்கள் கோடி கோடியாக கொள்ளையடித்து வைத்துள்ளீர்கள்.   என்னிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை.  என்னை எதிர்த்துப் பேசும் நீங்கள் பாஜகவை எடுத்துப் பேச முடியுமா.  என்னுடன் மோதக்கூடாது .  ஜெயக்குமார் மீது மரியாதை வைத்துள்ளேன்.  அதனை அவர் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பதிலடி கொடுத்திருக்கிறார்.