கட்சியை காப்பாற்றுங்கள் தலைவா! மாஜி அமைச்சர் அன்வர் ராஜா பரபரப்பு போஸ்டர்

 
aw

கட்சி சிதறி கிடக்கின்றது நாங்கள் பதறி துடிக்கின்றோம் காப்பாற்றுங்கள் தலைவா என்று போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா.   அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆரின் 35 வது நினைவு நாள் வரும் 24ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.  இதை முன்னிட்டு ராமநாதபுரத்தில் அன்வர் ராஜா இப்படி  போஸ்ட் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

 ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி அணி- ஓ. பன்னீர்செல்வம் அணி என்று இரு அணியாக பிரிந்து நிற்கிறது.  இருவரும் அதிமுகவுக்கும் கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னத்திற்கும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.   இந்த நிலையில் அதிமுகவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை இன்று கூட்டியிருக்கிறார் பன்னீர்செல்வம்.  இதற்கு போட்டியாக வரும் 27 ஆம் தேதி அன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தினை கூட்டி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

 இந்த நிலையில்  எடப்பாடி பழனிச்சாமியால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா இந்த போஸ்டரைகளை ஒட்டி இருக்கிறார்.  

m

 அதிமுகவில் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளராக இருந்தவர் அன்வர் ராஜா.  ஜெயலலிதாவின் விசுவாசி.  எடப்பாடி பழனிச்சாமி,  ஓ. பன்னீர் செல்வம் உடன் இருந்தாலும் சசிகலாவின் ஆதரவு நிலையில் இருந்தவர் அன்வர் ராஜா.  

எடப்பாடிக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை முன்வைத்து வந்ததால் அதிமுகவின் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சிவி சண்முகம்  அன்வர் ராஜாவை அடிக்க பாய்ந்திருக்கிறார்.  அவரை சக முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகள் கட்டுப்படுத்தியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.   எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து அன்வர் ராஜா சொல்லி வந்ததால் அதற்கெல்லாம் உச்சகட்டமாக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எம்ஜிஆர் ஜெயலலிதா புகைப்படங்களை கட்சி நிர்வாகிகள் பயன்படுத்தாமல் பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள்.  அதுதான் தோல்விக்கு காரணம் என்றும்,  தற்போதைய கட்சி தலைமை வலு இல்லாமல் இருக்கிறது என்றும் கூறியிருந்தார் அன்வர்ராஜா.

aa

 சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும் சொல்லி இருந்தார். இதனால்தான்  அவர் மீது சிவி சண்முகம் ஆத்திரத்தை காட்டினார்.    எடப்பாடி பழனிச்சாமியை அன்வர் ராஜா விமர்சிக்கும் வகையில் ஒரு ஆடியோவும் ரிலீஸ் ஆகி பரபரப்பு ஏற்படுத்தியது.   அந்த ஆடியோவில் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தன்னை புரட்சித்தலைவர் என்று நினைத்துக்கொண்டிர்ந்தார்  என்று விமர்சனம் செய்திருந்தார்.  அந்த ஆடியோவில் எடப்பாடி பழனிச்சாமியை ஒருமையில் பேசி விட்டதாகவும் கட்சிக்குள் சலசலப்பு இருந்தது.   இதனால் கட்சியின் செயற்குழுவுக்கு முன்னதாகவே அன்வர் ராஜா கட்சியிலிருந்து  நீக்கப்பட்டு விட்டார்.  அதன் பின்னர் அமைதியாக இருந்த அன்வர் ராஜா,  தற்போது மீண்டும் எம்ஜிஆரின் 35 வது நினைவு நாளில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் அந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

’’தலைவா ஏழை மக்களுக்காக நீங்கள் துவங்கிய கட்சி சிதறி கிடக்கின்றது நாங்கள் பதறி துடிக்கின்றோம் காப்பாற்றுங்கள் தலைவா’’ என்று அந்த போஸ்டரில் குறிப்பிட்டு இருக்கிறார் அன்வர் ராஜா.